சிலம்பரசன் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை பண விவகாரத்தில் சிக்கிக் கொண்டதால் அதன் பேச்சுவார்த்தை விடியவிடிய நடைபெற்றது. பின்னர் ஒருவழியாக காலை தாமதமாக திரைப்படம் வெளியாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல மாதங்களாக வெளியிட முடியாமல் இருந்துவரும் மாநாடு திரைப்படம் ஒருவழியாக நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். அந்த நாள் முதல் எல்லாம் சுமூகமாகவே நடைபெற்று வந்தது. பாடல் வெளியீடு நடந்தது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் என முழு வீச்சில் பட வெளியீட்டு வேலைகளில் படக்குழு ஈடுபட்டிருந்தது.


இந்த நிலையில் நேற்று மாலை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போட்ட ஒரு டிவீட் ரசிகர்கள் (Movie Lovers) மனதில் இடியாய் வந்து இறங்கியது. யாருமே அப்படி ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை. படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்தார் சுரேஷ் காமாட்சி. சிலம்பரசன், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு என யாருமே இதுகுறித்து வாய் திறக்கவில்லை. என்ன நடக்கிறது என அனைவரும் ஆராய தொடங்கினர்.



முன்னதாக சிலம்பரசன் நடிக்காமல் ஏமாற்றிவிட்டார் என்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் மீது சிலம்பரசனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருந்தது. அதுதான் காரணம் என விசாரித்ததில் தயாரிப்பாளர்கள் சங்கமும் விநியோகர்ஸ்தர்கள் சங்கமும் அதனை மறுத்துவிட்டன.


மேலும் ஆராயந்ததில் மாநாடு படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை (OTT RIGHTS) விற்று பைனான்ஸியர்களுக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பிக் கொடுக்க சுரேஷ் காமாட்சி திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் இறுதி நாளான நேற்றுவரை அந்த உரிமைகள் விற்கப்படாமல் இருந்ததால் பைனான்ஸியர்கள் படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது.


READ ALSO | ரசிகர்கள் அதிர்ச்சி! மாநாடு தள்ளி வைப்பு -தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திடீர் அறிவிப்பு


மாலை 6 மணிக்கு மேல் திரையுலகின் பலர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முன்வந்திருக்கிறார்கள். ஓடிடி நிறுவனம் மற்றும் சாட்டிலை உரிமையை விற்பதற்காக படத்தை திரையிட்டிருக்கிறார்கள். அதனை ஒரு விலைக்கு விற்று முடித்து செட்டில்மண்ட்க்காக தயாரிப்பாளர் காத்திருந்திருக்கிறார்.


இதனால் பைனான்ஸியர்கள், தயாரிப்பாளர் இடையேயான பேச்சுவார்த்தை விடிய விடிய நடைபெற்றது. இரவு 12 மணியளவில் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டாலும் காலை 7 மணி வரை பைனான்ஸியர் கைகளுக்கு பணம் சென்று சேராததால் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 


இறுதியாக 8 மணியளவில் பணத்தை பெற்றுக் கொண்டு மாநாடு திரைப்படத்தை வெளியிட பைனான்ஸியர்கள் அனுமதித்திருக்கிறார்கள். முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் முதல் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த திரையரங்கு உரிமையாளர்கள் வரை திக் திக் நொடிகளுடன் இரவு முழுவதும் கண்விழித்துக் காத்திருந்தார்கள். இறுதியாக படத்தை வெளியிட உதவிய அனைவருக்கும் நன்றி என சுரேஷ் காமாட்சி காலையில் ட்வீட் போட்டார்.


ALSO READ | தியேட்டர்களை கலக்கும் சிம்புவின் ‘மாநாடு’...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR