சென்னை : தமிழ் திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமான போதிலும் தனது துடிப்பான நடிப்பால் குறிப்பிடத்தக்க ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கி கொண்டார் நடிகர் சிம்பு.  வானம்,விண்ணை தாண்டி வருவாயா ,சிலம்பாட்டம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது .  சில படங்கள் ஹிட் கொடுத்தாலும் சமீப காலமாக வெளியான படங்கள் சில இவருக்கு அந்த அளவு வரவேற்பை பெற்று தரவில்லை.  கடந்த பொங்கல் தினத்தில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ சிக்கிய சந்தானம்; எஸ்கேப் ஆன அன்புமணி!


அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மாநாடு'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.  மேலும் , கல்யாணி பிரியதர்ஷன் ,பாரதிராஜா, எஸ். ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.  படத்தின் பர்ஸ்ட், நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படம் ஈகை பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார், பின்னர் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறியும் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.  மேலும் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர்.  


 



தற்போது 'மாநாடு' படத்தின் இசை வெளியீட்டு விழா, இந்த கொட்டும் மாலையிலும்  நாளை தியாகராய நகரில் நடைபெற உள்ளதாக படக்குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.  ஏற்கனவே மாநாடு படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.  மாநாடு டீசரும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகபடுத்தி உள்ளது.  படம் வெளியாவதற்கு முன்பு மற்றோரு டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.  மாநாடு படம் வரும் நவம்பர் 25ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. 


ALSO READ மீண்டும் உலகநாயகனுடன் இணையும் நடிகை த்ரிஷா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR