’மாநாடு வெற்றி, ஆனால் கலெக்ஷன்?..’ மௌனம் கலைத்த சுரேஷ்காமாட்சி
மாநாடு படம் வெற்றி பெற்றாலும், தயாரிப்பாளருக்கு லாபமா? என்ற கேள்விக்கு சுரேஷ் காமாட்சி கொடுத்துள்ள பதில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் வெங்கட்பிரபு - சிம்பு (Actor Simbu) கூட்டணியில் கடந்த வாரம் வெளியான ‘மாநாடு’ (Maanadu) திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் கூட்டம் களைகட்டியது. வெளிநாடுகளிலும் வரவேற்பு இருந்ததால், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இரண்டே நாட்களில் தியேட்டர் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் 14 கோடி ரூபாயைக் கடந்ததாக இயக்குநர் சுரேஷ் காமாட்சி டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
ALSO READ | அரசியில் கட்சி தலைவர்களை சீண்டியதா மாநாடு திரைப்படம்?
விநியோகிஸ்தர்களும் மாநாடு படம் நல்ல கலெக்ஷனைக் கொடுத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால், படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், மாநாடு படத்தின் உண்மையான நிலவரத்தை, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கூறியுள்ளார். படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும், கலெக்ஷனில் லாபம் கிடைத்துள்ளதா? என்ற கேள்வி பதில் அளித்த அவர், இல்லை எனத் தெரிவித்துள்ளார். அதற்கு காரணமாக பல்வேறு சூழ்நிலைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
" படம் தொடங்கியதில் இருந்தே பிரச்சனையும் இருந்தது. டைட்டில் சர்ச்சையாக இருப்பதால் அதனை மாற்றுமாறு பைனான்சியர்கள் கூறினார்கள். ஆனால், இதே டைட்டிலில் தான் படத்தை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பணப் பிரச்சனைகளும் இருந்தது. அதனையெல்லாம் சரிகட்டி சூட்டிங் சென்றால், கொரோனா பிரச்சனை வந்துவிட்டது. இரண்டு லாக்டவுன் அடுத்தடுத்து வந்ததால், சூட்டிங் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனை சமாளித்து ஒருவழியாக படத்தை எடுத்து முடித்துவிட்டோம்.
ALSO READ | எனது நடிப்பிற்கு மிகப்பெரிய விருது: எஸ்.ஜே.சூர்யா மாஸ் ட்விட்
வழக்கு ஏதாவது வரும் என நினைத்து அதற்கு தயாராக இருந்தபோது, படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு வழியாக படம் வெளியாகிவிட்டது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு இருந்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், லாபமா? என்றால், இல்லை. படத்துக்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டியுள்ளது. அதேநேரத்தில், படத்தை வாங்கியவர்களுக்கு நட்டமில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR