ZEE Tamil TV Serial Maari Today Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மாரி’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரி சீரியல்: இன்றைய எபிசோட் அப்டேட்:


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எல்லாரும் செக்கப் வந்திருக்க சூர்யா மரியாவிடம் மாரியை ஏற்ற வந்த விஷயம் குறித்து சொல்ல காரை சர்வீஸ் விட்டிருந்ததாக சொல்லி சமாளித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


மேலும் படிக்க | பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் 32 வயதில் மரணம்!


அதாவது, செக்கப் முடிந்ததும் மாரி சந்தேகத்துடன் ஸ்ரீஜா ரிப்போர்ட்டை வாங்கி பார்க்கிறாள். அதன் பிறகு இவர்கள் வீட்டிற்கு வர சூர்யா மரியா சொன்ன மெக்கானிக் கடைக்கு சென்று கார் நம்பரை சொல்லி சர்விஸ் விட்டு இருந்தார்களா என்று விசாரிக்க மரியா ஏற்கனவே பணத்தை கொடுத்து செட் செய்து வைத்திருந்ததால் ஆமாம் என சொல்லி விட சூர்யா வீட்டிற்கு வந்து விடுகிறான். 


இங்கே மாரி டூப்ளிகேட் ஸ்ரீஜா வீட்டிற்கு சென்று நீங்க கர்ப்பமாக இருக்கீங்கல உங்க ரிப்போர்ட்டை காட்டுங்க என்று சொல்லி கேட்க அதெல்லாம் என் புருஷன் எங்க வச்சிருக்காரு தெரியல என எஸ்கேப் ஆக முயற்சி செய்ய மாரி நகையை எடுத்துட்டு வந்தது நீங்க தானு தெரியும் என சிசிடிவி ஆதாரங்களை காட்டி உண்மையை சொல்ல சொல்கிறாள்.


மாரி: சீரியலை எங்கு பார்ப்பது?


மாரி சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | 2024 தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டியிடவில்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ