ZEE Tamil TV Serial Maari Today Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மாரி’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரி : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் விக்ரம் சூர்யா மரியாவை சந்தித்து விசாரிக்க அவள் வேறொரு புத்தகத்தை காட்டி தப்பித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, மாரி சூர்யாவின் ஆபிசுக்கு சாப்பாடு கொண்டு வர சூர்யா, மாரி என இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொள்கின்றனர். அதன் பிறகு ஆபீஸில் வேலை செய்பவர்கள் மாரியை சந்தித்து உங்களுக்கு தேவியமாக திரும்ப குழந்தையா வந்து பிறக்கப் போறாங்க ஆனா அவங்களுக்கு தேவையான பேரை வைத்து கூப்பிட முடியாது அதனால நாங்க சில பேர்களை யோசிச்சு வச்சிருக்கோம் என்று பெயர்களை சொல்ல மாரி கண்டிப்பா இது பெயர்களில் ஒன்றுதான் தேர்வு செய்து குழந்தைக்கு வைப்போம் என வாக்கு கொடுக்கிறாள். 


இந்த நேரம் பார்த்து இங்கு வரும் தாரா இதையெல்லாம் கேட்டுவிட்டு வெளியே வராமல் சாக போற குழந்தைக்கு எதுக்கு பேரு என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள்‌. அடுத்து தாரா சூர்யாவை சந்தித்து மாரிக்கு ஏழாவது மாசம் வளைகாப்பு வைக்கலாம்னு முடிவு எடுத்திருப்பதாக சொல்லி அழைக்க சூர்யா கண்டிப்பாக வருவதாக சொல்ல மாரி நீங்க கூப்பிட்டு வராமல் இருப்போமா அத்தை கண்டிப்பா வருகிறோம் என சொல்கிறாள். 


மேலும் படிக்க | ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படத்திற்கு அங்கிகாரம்!


பிறகு நீலகண்டன் தாத்தா சூர்யாவுக்கு போன் செய்ய மாரி போனை எடுத்து பேசுகிறாள். தாத்தாவின் நலம் விசாரித்துவிட்டு அம்மா இங்கே என்று கேட்க காசிக்கு போனவன் இன்னும் வரலாமா எப்படியும் பிறத்த வைத்துக்கொள்ள வந்திடுவார் என்று சமாளித்து போனை வைத்துவிட்டு மாரியை அவளுடைய உண்மையான அம்மாகிட்ட எப்படி கொண்டு போய் சேர்ப்பேனு தெரியலையே என ஒரு பொட்டிக்குள் மாரி சிறுவயதில் அணிந்திருந்த டிரஸ், நகை எடுத்துப் பார்த்து கண் கலங்குகிறார். 


இதனைத் தொடர்ந்து தாரா வீட்டில் ஜெகதீஷ் பார்வதி சுஜாதா ஆகியோர் பேசிக் கொண்டிருக்க பார்வதி மாரியை தன்னுடைய மகளாக தத்தெடுத்துக் கொள்ள முடிவெடுத்து இருப்பதாக சொல்கிறாள். அது மட்டுமின்றி என்னுடைய மனைவிக்கு பிறகு என் சொத்துக்கள் எல்லாம் மாரிக்கு தான் போய் சேரனும்னு எழுதி வைக்கப் போவதாகவும் சொல்ல ஜெகதீஷ் இது நல்ல விஷயம் என்று பாராட்ட இதை அறிந்து தாரா அதிர்ச்சி அடைகிறாள்.


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மாரி: சீரியலை எங்கு பார்ப்பது?


மாரி சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ