கோவில் பூஜையில் ஜாஸ்மின் செய்த சம்பவம்.. மாரிக்கு ஷாக்! இன்றைய எபிசோட் அப்டேட்
Maari Today Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் காண்போம்.
Maari TV Series: திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களை களமிறங்கி பலரையும் கவர தொடங்கிவிட்டன. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
இன்றைய எபிசோட்: மாரி
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாரி துர்காவுடன் விளையாடிக் கொண்டிருக்க அப்போது ஊர் காரர்கள் தாம்பூல தட்டுடன் வந்து கோவில் கட்ட பூமி பூஜைக்காக செங்கல் கற்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என சொல்ல பிறகு மாடத்தி அம்மன் சிலை முன்பு கற்களை வைத்து பூஜை செய்கின்றனர். தேவி அம்மாவும் அங்கு தோன்றி மாரி நல்ல விதமாக இந்த கோவிலை கட்டி முடிக்க வேண்டும் என வேண்டுகிறார். மறுபக்கம் ஜாஸ்மின் டீம் இந்த கோவில் கட்டும் வேலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என திட்டம் தீட்டுகிறது.
அடுத்து கோவில் கட்டும் இடத்தில் மாரி, சூர்யா, என்ஜினியர், ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி பூஜைக்காக பள்ளம் தோண்டும் வேலையில் இறங்க தூரத்திலிருந்து பார்க்கும் ஜாஸ்மின் தனது பார்வையால் தண்ணீரில் எதையோ கலக்க வைக்கிறாள்.
மேலும் படிக்க: "குக் வித் கோமாளி 4" அடுத்த வார கலக்கல் எபிசோட், வெளியான மாஸ் அப்டேட்
அதன் பிறகு தண்ணீரை குடித்த தொழிலாளிகள் ஒவ்வொருவராக கை கால் செயலிழந்து கீழே விழ அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு டாக்டரை வரவைத்து அவர்களை பரிசோதனை செய்ய மருத்துவ ரீதியாக அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அப்படி இருக்கையில் எப்படி இப்படியானது என புரியவில்லை என டாக்டர் அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதற்கு அடுத்ததாக ஜாஸ்மின் தண்ணீர் குடிக்காமல் நல்ல விதமாக இருந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணை தனது நோக்கு மர்ம கலையால் கட்டுபாட்டில் கொண்டு வந்து இங்கே கோவில் கட்டுவதில் அம்மனுக்கு விருப்பமில்லை, அதனால் தான் இப்படி நடக்கிறது, இனிமே இங்கே வேலை செய்ய கூடாது என சொல்ல வைக்கிறாள்.
அதன் பிறகு ஜெகதீஷ் வீட்டுக்கு வரும் ஊர் தலைவர் இனி கோவில் வேலைகளில் ஈடுபட முடியாது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் ஜாஸ்மின் டீம் சந்தோஷம் அடைய ஜெகதீஷ் குடும்பம் அதிர்ச்சி அடைகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
"மாரி" தொடரை எங்கு பார்ப்பது?
மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் பிரபலமாக சீரியல் "மாரி" என்ற தொடர் 2022 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் டிஜிட்டல் தளமான ZEE5 இல் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும் படிக்க: விரைவில் முடிவுக்கும் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்..அதிர்ச்சியில் ரசிகர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ