தமிழ் ரசிகர்களை பொருத்தவரை, பெரிய திரையில் வெளியாகும் படங்களுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனரோ, அதே அளவிற்கு சின்னத்திரை தொடர்களுக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் ஒரு சில குறிப்பிட்ட தொடர்களை, ஆண்-பெண் என பேதமின்றி பலர் அனைத்து பாலினரும் விரும்பி பார்க்கின்றனர். தரமான சீரியல்களை வழங்கி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய தொடராக கருதப்படுவது, மாரி. தெய்வ அருள் மிகுந்த ‘மாரி’ என்ற பெண்ணை சுற்றி நிகழும் கதைதான் இத்தொடரின் மையக்கரு. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில், முதல் எபிசோடில் இருந்து தற்போது வரை பல ஒரு நாள் தவறாமல் அனைத்து எபிசோடுகளும் திருப்பங்கள் நிறைந்ததாக உள்ளது. இந்த நிலையில், மாரி தொடரில் இதுவரை நடந்தவற்றையும் இனி நடக்க இருப்பவற்றையும் பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை நடந்தது..


இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் தேவி நினைவு அஞ்சலி விழாவில் தாரா விளக்கேற்ற போது அது எரியாமல் இருக்க அதன் பிறகு மாரி விளக்கேற்ற போகும்போது சாமி வந்தது போல் அடி சூலாயுதத்தை எடுத்து தாரா கழுத்தில் வைத்து மரண பயத்தை காட்டினாள். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் தேவியம்மாவின் நினைவு அஞ்சலி நல்லபடியாக நடந்து முடிய எல்லோரும் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக கிளம்பிச் மாரி மற்றும் சூரியா மகிழ்ச்சி அடைகின்றனர். 


மேலும் படிக்க | ‘சித்தா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?


இனி நடக்கவிருப்பது..


சூரியா மகிழ்ச்சி அடைந்ததை ஒட்டி, அங்கிருந்து சாப்பிடாமல் வந்த தாராவின் டீம் பசியால் தவிக்க ஹாசினியை சமைக்க சொல்கின்றனர். பிறகு ஹாசினி இவர்களுக்கு சமைத்துக் கொடுக்க அதை சாப்பிட்டவர்கள் வாயில் வைக்க முடியல உப்பு என அதிர்ச்சி அடைகின்றனர். பார்வதி ஏன் இப்படி எல்லாம் பண்ண என்று கேள்வி கேட்க மாரியை வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க இவங்க இன்னும் அணுப வைக்கணும் என கோபத்தை வெளிக்காட்டுகிறாள்.


பிறகு எல்லோரும் பசியால் தவித்துக் கொண்டிருக்க முருகன் ஜாஸ்மின் ரூமுக்குள் அத்துமீறி நுழைய அவள் பயப்பட சாப்பாடு கொண்டு வந்திருப்பதாக சொல்லி சாப்பிட சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: “ஐஷூ வெளியேறிதற்கு காரணம் இதுதான்..” நிக்ஸன் சொன்ன சர்ச்சை கருத்து!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ