ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன், அண்ணா, சந்தியாராகம், வீரா, நினைத்தேன் வந்தாய், கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில்  தீபா மாரி ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவில் பாட வந்து பாடி கொண்டிருக்க மாரி சாமுண்டீஸ்வரி அம்மாவுக்கு எதுவும் ஆக கூடாது என்று பதற்றத்தில் இருக்க சூர்யா சாமுண்டீஸ்வரி அம்மாவை யார் பின் தொடர்வது என்று நோட்டம் விட்டபடி இருக்க ரவுடி ஒருவன் சுற்றி கொண்டிருப்பதை கவனிக்கிறான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Manjummel Boys: 100 கோடி வசூலை தாண்டிய மஞ்சுமெல் பாய்ஸ்! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?


இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது ரவுடி தாராவுக்கு போன் போட்டு அந்த சூர்யாவால் என் திட்டம் பலிக்காமல் போய்டுச்சு, நாளைக்கு எப்படியாவது சாமுண்டீஸ்வரியை இங்க வர வச்சிடுங்க நான் அவங்கள கொல்லாமல் விட மாட்டேன் என்று சொல்ல தாரா கண்டிப்பா நான் வர வைக்கிறேன். என்ன பிளான் வச்சிருக்க? எப்படி கொல்ல போற என்று கேட்கிறாள். ரவுடி குத்து விளக்கால் குத்தி கொல்ல போறேன், கோவிலுக்கு உள்ள குத்து விளக்கு எடுத்துட்டு போறது ரொம்ப ஈஸி, அதை வச்சி அவங்களை கொன்னுடுறேன் என்று சொல்லி போனை வைக்கிறான், மறுபக்கம் மாரி விஷனில் கண்டதை நினைத்து பயந்தபடி இருக்க சூர்யா ஆறுதல் சொல்கிறான், போலீசும் பாதுகாப்புக்கு வராங்க யாரும் அப்படி சாமுண்டீஸ்வரி அம்மாவை நெருங்க முடியாது என்று சொல்கிறான். 



அதனை தொடர்ந்து ஜெகதீஷ் வீட்டில் தாரா எல்லாரையும் கூப்பிட்டு கொண்டு கிளம்ப தயாராக திடீரென நான்கு பேர் வீட்டிற்குள் புகுந்து இன்கம் டேக்ஸ் ஆபிசில் இருந்து வந்திருப்பதாகவும் வீட்டை சோதனை போடணும் என்றும் சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Dulquer Salmaan: கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்? காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ