ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் முருகன் எல்லோரும் இருக்கும் இடத்தில் வந்து ஜாஸ்மினுடன் முதல் இரவு நடந்தது போலவே பில்டப் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  முருகனின் செயல்பாடுகளால் கடுப்பாகும் தாரா உண்மையாகவே முதல் இரவு முடிந்து விட்டதோ என சந்தேகப்படுகிறாள். பிறகு ஹாசினி முருகனிடம் கேட்க எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்று உண்மையை சொல்ல அவ்வளவு சீக்கிரம் அவ மாற மாட்டா, ஆனா மாத்தி காட்டுகிறேன் என சொல்கிறாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?


அடுத்ததாக ஜாஸ்மின் தாராவிடம் வந்து இந்த முருகனை நான் சமாளித்து கொள்கிறேன். மாரியும் சூர்யாவும் சுவிட்சர்லாந்து போகக்கூடாது என்று சொல்ல தாரா அதுக்கு என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு என்று சொல்லி கூலிப்படையை வரவைத்து மாரி, சூர்யா செல்லும் காரை லாரியால் இடிக்க சொல்லி உத்தரவு போடுகிறாள்.  அதனைத் தொடர்ந்து மாரி மற்றும் சூர்யா இருவரும் கிளம்பி வந்து தாராவிடம் ஆசீர்வாதம் வாங்க நல்லவள் போல வேஷம் போடுகிறாள். 


தேவி அக்கா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கங்க என்று சொல்ல இருவரும் தேவி போட்டோ முன்பு சாமி கும்பிட்டு கிளம்பிச் செல்ல இவர்களை இடிக்க லாரியும் பின் தொடர்ந்து வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வா? வாவ்.. செம அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ