தமிழ் சினிமாவில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.  படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அனிருத்தை அழ வைத்த நடிகர் கமல்ஹாசன்...காரணம் என்ன?


படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 500-க்குமேலான திரையரங்குகளில் விக்ரம் படத்துடன் மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. 



மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு மாயோன் படத்தில் பதில் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர். இதனால் மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலும் அதிகரித்துள்ளது. “மாயோன்” திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


மேலும் படிக்க | சிம்புவின் அடுத்த படம் டிராப் - டைரக்டரை தேடும் தயாரிப்பு நிறுவனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe