தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் மிகப்பிரபலமாக இருக்கும் மாதவன் (Madhavan), தற்போது ’ராக்கெட்ரி; நம்பி விளைவு’  (Rocketry: Nambi effect) படத்தை இயக்கி நடித்துள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் டிசம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. விஞ்ஞானியான நம்பி நாரயணன், தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட இன்னல்களை, திரையில் மாதவன் அப்படியே கொண்டு வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Also Read | ஆணவப் பேச்சு ஏன் Cook With Comali? அஸ்வினை கலாய்க்கும் நெட்டிசன்கள்


இந்த பட புரோமோஷனில் பிஸியாக இருக்கும் மாதவன், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அண்மையில், சட்டை இல்லாத புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். சாக்லெட் பாயான அவரின் இந்தப் புகைப்படம் மில்லியன் லைக்குகளை வாரிக்குவித்தது. ஆனால், மாதவனின் மனைவிக்கு இது பிடிக்கவில்லையாம். 51 வயதாகும் நீங்கள், சட்டை இல்லாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர வேண்டாம், வயதுக்கு ஏற்றார்போல் நடந்து கொள்ளுங்கள் என கண்டிப்புடன் அறிவுறுத்தினாராம். இந்த தகவலை மாதவனே சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். 


ALSO READ | ”இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா?” கொந்தளித்த நடிகை


விஞ்ஞானி நம்பிநாராயணன், 1994 ஆம் ஆண்டு கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம்சாட்டப்பட்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதனால், இஸ்ரோ பணியை இழந்த அவர், வழக்கு மற்றும் சிறைவாசத்தை எதிர்கொள்ள நேரிட்டது. பின்னர், அந்த வழக்கை இறுதி வரை விடாமல் நடத்திய நம்பி நாராயணன் நீதிமன்றம் மூலம் விடுதலையும் பெற்றார். மேலும், இந்த வழக்குக்காகவும், அவர் சந்தித்த அவமானங்களுக்காகவும் இழப்பீடு வழங்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. காவல்துறையால் கைது செய்யப்பட்டு, மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து, அதில் இருந்து போராடி மீண்ட அவருடைய வாழ்க்கை, ’ராக்கெட்ரி நம்பி விளைவு எனும் படமாகவும் உருவாகியுள்ளது  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR