”இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா?” கொந்தளித்த நடிகை

பாயல் ராஜ்புட்டின் சமீபத்திய போட்டோஷூட்டின் போது கசிந்த 5 நிமிட வீடியோ கிளிப்பால் இவர் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்

Written by - ZEE Bureau | Last Updated : Dec 7, 2021, 09:19 AM IST
”இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா?” கொந்தளித்த நடிகை

பாயல் ராஜ்புட் தெலுங்கு மற்றும் பஞ்சாபி திரையுலகில் முன்னணி வகிக்கும் நடிகை.  கடந்த 2018-ம் ஆண்டு வெளியான  RX 100 என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.  இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போட்டோக்களுக்கென்றே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது.

ALSO READ | ஓமிக்ரான் வைரஸ் எதிரொலி - திரையரங்குகளுக்கு மீண்டும் கட்டுப்பாடா?

இந்நிலையில் இவரின் சமீபத்திய போட்டோஷூட்டின் போது கசிந்த 5 நிமிட வீடியோ கிளிப்பால் இவர் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.  அவரது மார்பகம் தெரியும்படியான அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு, பாயல் பற்றி பல மோசமான கருத்துக்களை பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

இதனையடுத்து அந்த போட்டோ குறித்து கூறுகையில், "அது வெறும் நிப் ஸ்லிப் தான், இதை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக கருத வேண்டும்?" .  இதனை மக்கள் பெரிதாக கருதுவதை பார்த்தால் இதுவரை அவர்கள் யாரும் இது போன்ற புகைப்படங்களை பார்க்காதது போல உள்ளது.  

PayalRajput

மேலும் இதுகுறித்து கூறுகையில், இந்த வீடியோவை தவறுதலாக யாரோ இணையத்தில் கசிய விட்டுள்ளனர்.  சமூக வலைதள பக்கத்தில் இந்த புகைப்படத்திற்கு எழுந்த கேவலமான கருத்துக்கள் என்னையும், என் குடும்பத்தையும் மிகவும் பாதித்தது.  இதுவே அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்ணாக இருந்தால் இப்படி தான் கூறுவார்களா? என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.  இந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கினாலும் அது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ALSO READ | டிசம்பர்-10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 6 புதிய படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News