திரும்பி வந்துட்டேனு சொல்லு..! 6 மாதத்தில் வெளியாகும் சிம்புவின் 3 படங்கள்!
இந்த ஆண்டு தொடர்ச்சியாக சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மிகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகர் சிம்புவின் கைவசம் இந்த வருடத்தில் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள 'மஹா படம் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. ஹன்சிகா மோத்வானி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக இப்படத்தை பற்றி எவ்வித அப்டேட்டும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை-22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது. யுஆர் ஜமீல் இயக்கத்தில் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த், சனம் ஷெட்டி, கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | விருமன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கும் படம் இதுதான்!
அடுத்ததாக இந்த ஆண்டு சிம்புவின் பெரிய ரிலீஸ் 'வெந்து தணிந்தது காடு', ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் கௌதம் மேனனுடன் சிம்பு மீண்டும் இணையும் படம் இது. இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 'வெந்து தணிந்தது காடு' படம் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சிம்பு வாழ்வாதாரம் தேடி பெரிய நகரத்திற்கு வரும் இளைஞனாகவும், அங்கு அவன் நிலைமை எப்படி மாறுகிறது என்பதை படத்தின் டீசர் காண்பித்தது. சிம்பு அவரது தந்தை டி.ராஜேந்தரின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது . தற்போது இந்த படம் வெந்து இந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அடுத்ததாக சிம்பு நடிப்பில் 'பத்து தல' படம் உருவாகிக்கொண்டு இருக்கிறது, தற்போது சிம்பு வெளிநாட்டில் இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படத்தை டிசம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுவோம் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கன்னடத்தில் ஹிட்டான 'மஃப்டி' படத்தின் ரீமேக் தான் இந்த 'பத்து தல' படம், கன்னடத்தில் சிவராஜ்குமார் மற்றும் ஸ்ரீமுரளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தற்போது படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு கேங்ஸ்டராக நடிக்க, கௌதம் கார்த்தி ஸ்ரீமுரளியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் படிக்க | கார் விபத்தில் சிக்கிக்கொண்ட கேஜிஎஃப் நடிகர்..ரசிகர்கள் அதிர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR