மகாபாரதம் விவகாரம்: கமலஹாசன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல்
நடிகர் கமலஹாசன் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோரட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், மகாபாரதம் பற்றி சில கருத்துகளை கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் கமல்ஹாசன் கருத்துகள் இந்துக்களை அவமதிப்பதாக உள்ளது. மகாபாரதம் பற்றி தவறான கருத்துகளை கூறியதால் நடிகர் கமல்ஹாசனுக்கு அபராதத்துடன் கூடிய அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி கடந்த மார்ச் மாதம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 5-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றறை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தன் மீதான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.