புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் தான் மகாநதி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை சாவித்திரி 60-ம் மற்றும் 70-ம் ஆண்டு காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். 


அந்த வகையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.


இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா, நிருபர் வேடத்தில் நடித்துள்ளார். துல்கர்சல்மான் ஜெமினி கணேசனாக வேடத்தில் நடிக்கிறார். 


இந்நிலையில் இன்று நடிகை சாவித்ரியின் பிறந்த நாள் என்பதால், இன்று மாலை 3 மணியளவில் மகாநதி படத்தின் டீசர் மற்றும் புதிய போஸ்டரை வெளியிட இருக்கிறார்கள்.