வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'தளபதி 66' படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சில லேட்டஸ்டாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கும், மகேஷ் பாபு ரசிகர்களுக்கும் ஆவலை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.  ஏற்கனவே இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியும், மகேஷ் பாபுவும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர், அதோடு மகேஷ் பாபுவை வைத்து வம்சி இயக்கிய 'மகரிஷி' படம் ஹிட் ஆனது.  இந்த சிறந்த பொழுதுபோக்கான படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 'தளபதி 66' ஸ்பாட்டிலிருந்து லீக் ஆனா புகைப்படங்கள்!


தற்போது வெளியாகியுள்ள சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, 'தளபதி 66' படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க மகேஷ் பாபுவை, வம்சி அணுகியதாகிவும், நண்பனின் கோரிக்கையை தவிர்க்கமுடியாத காரணத்தால் மகேஷ் பாபு 'தளபதி 66' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாய் பரவி வருகின்றன.  ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், இரண்டு பெரிய தென்னிந்திய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.



மேலும் வெளியாகியுள்ள சில தகவல்களின்படி, படத்தில் விஜய்யை அறிமுகப்படுத்தும் காட்சிக்கு மகேஷ் பாபு குரல் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.  டீமில் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜுவின் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  முதன்முறையாக இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார், மேலும் பல முக்கியமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க | விக்ரம் படத்தின் டெலிடெட் சீன்ஸ் எப்போது வெளியாகும்? லோகேஷ் பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR