திருச்சியில் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் "நமக்கான அரசியல் பயணத்தில் நம்மவருடன் நாம்" என்ற பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுகூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்த்துக்கொண்டு உரையாற்றுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொடி, கட்சி, மக்கள் என கமலின் அரசியல் பிரகடனம் -முழு விவரம்


இந்த பொதுகூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும் ஏப்ரல் 3-ம் பயணிக்கிறார். இந்தப் பயணத்தின் போது இடையில் உள்ள சில ரயில் நிலையங்களில் கமல்ஹாசன் அவர்கள் மக்களை சந்திக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.


கமல் பற்றி உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்- சில சுவராஸ்யம்


இந்நிலையில், ரயில் நிலையங்களை பிரச்சார மேடையாக கமல்ஹாசன் பயன்படுத்தினால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே ரயில் நிலையத்தில் மக்களை சந்திக்க கமல்ஹாசனுக்கு அனுமதி வழங்கக் கூடாது என சிலர் தெற்கு ரயில்வேயிடம் மனு அளித்தனர். இதனால் கமல்ஹாசன் ரயில் நிலையங்களில் மக்களை சந்திக்க கூடாது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.


இந்நிலையில், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியது, "மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள். அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி இது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்து விடுவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே" என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.


கமல் பிறந்தநாள்: சில சுவாரஸ்ய தகவல்கள்!