RIP Nedumudi Venu | பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மலையாளத் திரையுலகில் பிரபல நடிகரான நெடுமுடி வேணு காலமானார்
பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார். 73 வயதான நெடுமுடி வேணு சமீபத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
COVID நோயில் இருந்து மீண்டு வந்த அவர், நேற்று (அக்டோபர் 10, ஞாயிற்றுக்கிழமை) உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நெடுமுடி வேணு, சிகிச்சை பலனின்றி காலமானார்.
நெடுமுடி வேணுவின் இயற்பெயர் கே. வேணு கோபால் (K. Venu Gopal) ஆகும். கேரளா மாநிலத்தின் ஆலப்புழையில் பிறந்த வேணுவின் பெற்றோர் பி. கே. கேசவன், பி. குஞ்ஞிக்குட்டியம்மா ஆவர். நெடுமுடி வேணுவுக்கு டி. ஆர். சுசீலா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.
சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் நெடுமுடி வேணுவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பிரபல நடிகரின் மறைவுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் கலாகெளமுதி பத்திரிகையில் பணியாற்றினார். அவர் நடித்த நாடகத்தின் கதாபாத்திரத்தின் பெயரான நெடுமுடி என்ற பெயர் அவரது பட்டப்பெயராக ஒட்டிக் கொள்ள நெடுமுடி வேணு என்றே அவர் அறியப்படுகிறார்.
பத்திரிகையாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த நெடுமுடி வேணு, நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். 1978ஆம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்த நெடுமுடி வேணு, சுமார் 500 திரைப்படங்களில் நடித்துளார்.
3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்றுள்ள நெடுமுடி வேணுவுக்கு திரைக்கதை எழுதுவதிலும் வல்லவர். அதோடு, மலையாளத் திரைப்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.
தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாள மயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
ALSO READ | 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் விஜய் - பிரகாஷ்ராஜ் கூட்டணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR