ரஜினிகாந்தை சந்தித்த மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று சந்திக்க உள்ளனர் என தகவல் வெளியானது.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும், இன்று காலை ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தனர். அவர்களை ரஜினிகாந்த் வரவேற்றார். ரஜினியின் படங்கள், அவருக்கு தாங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்பதையெல்லாம் ரஜினியிடம் கூறினர் மலேசிய பிரதமரும் அவர் மனைவியும். ரஜினியை மலேசியாவின் சுற்றுலா தூதராக வரும்படி இந்த சந்திப்பில் அழைப்பு விடுத்தனர்.