காற்றுவெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிகர்கள் பட்டாளமே இடம் பெறுகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஆனால் புரொடெக்ஷன் எண் 17 என்று அழைத்து வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்த படத்திற்கான நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைகஞர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 


அதன்படி இந்த படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், அரவிந்த்சாமி ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படம் மெகா பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.