Aishwarya Rajinikanth Lal Salaam Vs Manikandan Lover Box Office Collection: கடந்த 9ஆம் தேதியன்று (பிப்ரவரி 2024) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்த ‘லால் சலாம்’ படமும், மணிகண்டன் ஹீரோவாக நடித்திருந்த ‘லவ்வர்’ படமும் வெளியானது. இந்த இரு படங்களில் லவ்வர் திரைப்படம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இரு படங்களும் வெளியாகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படங்களுக்கு இதுவரை வந்த விமர்சனங்கள் குறித்தும், இதுவரை வந்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்தும் இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லால் சலாம் படத்தின் விமர்சனம்..இதுவரை வந்த வசூல்..


ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், லால் சலாம். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, செந்தில், ஜனகராஜ், தம்பி ராமையா உள்ளிட்டோர் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த், படம் இப்படத்தில் கேமியோ ரோலில் ‘மொய்தீன் பாய்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து கேமியோ ரோலில் லால் சலாம் படத்தில் நடித்துள்ளதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், படம் வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போதும் அதே நிலை தொடர்கிறது. முதல் நாளில் படம் ரூ.8 கோடி வரை வசூலித்திருந்த நிலையில், நேற்று வரை 15.1 கோடி வரை உலகளவில் வசூலித்திருந்ததாக கூறப்படுகிறது. 


லவ்வர் படத்தின் விமர்சனம்…இதுவரை செய்த வசூல்..


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர், மணிகண்டன். சில்லுக்கருப்பட்டி, குட் நைட் போன்ற தனித்துவமான கதையம்சம் நிறைந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களுள் மணிகண்டனும் ஒருவர். அந்த வகையில் அவர் தேர்ந்தெடுத்து நடித்திருந்த படம், லவ்வர். இன்றைய இளம் தலைமுறையினர் சிக்கித்தவிக்கும் டாக்ஸிக் காதலை தாேலுறித்து காண்பித்திருக்கும் படம் இது. இதனை பிரபுராம் வியாஸ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கெளரி பிரியா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். 


மேலும் படிக்க | ஹாலிவுட் பட விருதுகளில் இடம் பெற்றுள்ள அட்லீயின் ஜவான்!


லவ்வர் படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது வரை இந்த விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. முதல் நாளில் ரூ.70 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இப்படம் தற்போது வரை ரூ.3 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய நாள் முடிவில் இந்த வசூல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 


லால் சலாம் படத்திற்கு ஈடு கொடுக்கிறதா? 


தமிழ் மக்களின் ரசனை தற்போது எவ்வளவாே மாறிவிட்டது. முன்னர், தங்களுக்கு பிடித்த ஹீரோக்களுக்காகவும், அந்த மாஸ் தனத்தை பார்ப்பதற்காகவும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது, படத்தின் கதைதான் ஹீரோ என புரிந்து காெண்ட அவர்கள், கதை நன்றாக இருந்தால் அதற்கு தகுந்த பாராட்டுகளை கொடுக்கவும், தியேட்டருக்கு சென்று பார்க்கவும் தயங்குவதில்லை. அந்த வகையில், லால் சலாம் படத்துடன் ஒப்பிடுகையில் லவ்வர் படம் நல்ல விமர்சனத்தையே பெற்று வருகிறது. 


லால் சலாம் படத்தின் பட்ஜெட்ட ரூ.80 கோடி முதல் 100 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் படமோ, தற்போது வரை 15 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. லவ்வர் திரைப்படம், ரூ.5 கோடி பட்ஜெட்டிலேயே எடுக்கப்பட்டது. தற்போது இப்படம் சுமார் 3 கோடிக்கு மேல் கலெக்ட் செய்து விட்டது. அந்த வகையில், லால் சலாம் படத்திற்கு முன்னரே இப்படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Manikandan Salary: ‘லவ்வர்’ படத்தில் நடிக்க மணிகண்டன் வாங்கிய சம்பளம் எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ