Manikandan Salary: ‘லவ்வர்’ படத்தில் நடிக்க மணிகண்டன் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Manikandan Salary For Lover Movie: சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றிருக்கும் லவ்வர் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் ஹீராேவாக நடித்திருந்தார்.   

Written by - Yuvashree | Last Updated : Feb 12, 2024, 08:41 PM IST
  • லவ்வர் படத்தில் மணிகண்டன் நடித்திருந்தார்
  • குட்நைட் படம் மூலம் பிரபலம்
  • இவரது சம்பள விவரம்
Manikandan Salary: ‘லவ்வர்’ படத்தில் நடிக்க மணிகண்டன் வாங்கிய சம்பளம் எவ்வளவு?  title=

Manikandan Salary For Lover Movie: மணிகண்டன் நடிப்பில் புதிதாக வெளிவந்துள்ள படம், லவ்வர். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வசூலை குவித்து வருகிறது. 

இளசுகள் மத்தியில் பிரபலமான மணிகண்டன்..

நடிகர் மணிகண்டன், சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குள் பிரவேசித்த நடிகர்களுள் ஒருவர் ஆவார். அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்பு, பெரிய ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

காலா படத்தில், ரஜினிகாந்த்திற்கு மகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் பவர்ஃபுல்லான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், பின்னர் சில்லுக்கருப்பட்டி படத்தில் கவனிக்கத்தக்க கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெய் பீம் படத்தில் ராஜா கண்ணு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த மணிகண்டன், இதற்காக ரசிகர்களை நன்றாக கவர்ந்தார். மணிகண்டன் கடந்த ஆண்டு நடித்திருந்த படம், குட் நைட். குறட்டை விடும் பிரச்சனை கொண்ட ஒரு சாமாணியன், தனது வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்பது பாேன்ற கதையை இதில் காண்பித்திருப்பர். இதில் மோட்டர் மோகனாகவே வாழ்ந்திருப்பார், மணி. சாதாரண கமர்ஷியல் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இளசுகளுக்கு பிடித்த நாயகனாக வலம் வருகிறார்.

மேலும் படிக்க | ரசிகர்களுக்கு ஷாக்! விஜய் இனி கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா?

லவ்வர் படத்தில் மணிகண்டன்..

பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் கடந்த 9 ஆம் தேதி (பிப்ரவரி) வெளியாகியிருந்த படம், லவ்வர். இந்த படத்தில் மணிகண்டனுடன் சேர்ந்து, ஸ்ரீ கெளரி பிரியா நாயகனாக நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாகவே வந்திருக்கின்றன. படம், காதலின் டாக்ஸிக் பக்கங்களை அக்கு வேறு அணி வேறாக பிரிக்கும் படமாக உள்ளது. 

மணிகண்டனின் சம்பளம்..

நடிகர் மணிகண்டன், தற்போது வளர்ந்து வரும் ஹீரோவாக உள்ளார். தனக்கான கதைகளையும் தானே நன்றாக செலக்ட் செய்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஆயிரங்களில் சம்பளம் வாங்கி வந்த இவர், தற்போது சில லட்சங்களை சம்பாதித்து வருகிறார். குட் நைட் படம் ஹிட் ஆன பிறகு, தனது சம்பளத்தை இவர் கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. லவ்வர் படத்தில் நடிக்க, ரூ. 2 கோடி வரை இவர் சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், படமே சிறிய பட்ஜெட் என்பதால் தனது சம்பளத்தை இவர் குறைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 18+ வீடியோவில் ஜானி சின்ஸ் & ரன்வீர் சிங்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News