‘மனிதநேயமே மரத்து விட்டது’ மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..!
Manipur Violence Video: மணிப்பூர் கலவரத்தின் போது பெண்களை போராட்டக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதற்கு எதிராக சில பாலிவுட் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் வாழும் மெய்டே மற்றும் குக்கி என்ற இரு சமூகத்தினரிருக்கு இடையேயான கலவரம் இன்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த கலவரத்தின் போது, இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பலரது கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து பாலிவுட் சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் கலவரம்:
மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மெய்டேய் இன மக்களுக்கு மலைப்பகுதிகளில் அதிகம் வசிக்கும் குக்கி பழங்குடியினருக்கும் பட்டியல் பழங்குடியினர் வகை பிரிவினைக்காக கலவரம் வெடித்தது. இதையடுத்து, கடந்த மே மாதம் 4ஆம் தேதியன்று மணிப்பூரில் உள்ல கங்போகி மாவட்டத்தில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கிய போராட்டக்காரர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக பாலிவுட் பிரபலங்கள் பலர், கண்டன குரல்களை எழுப்பியுள்ளனர்.
அக்ஷய் குமார்:
பிரபல நடிகர் அக்ஷய் குமார், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மனிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை பார்க்கையில் தன் உடல் நடுங்குவதாக குறிப்பிட்டுள்ளார். இனி யாரும் இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடாதவாறு அந்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அக்ஷய் குமார் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
கியாரா அத்வானி:
ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்துள்ள கியாரா அத்வானி, இந்த சம்பவம் தன்னை வெகுவாக பாதித்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் கலவரம் குறித்து வெளியான வீடியோ ஆதாரம் என்னை வெகுவாக பாதித்து விட்டது. இதில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சோனு சூட்:
பிரபல வில்லன் நடிகர் சோனு சூட், மணிப்பூர் சம்பவத்தில் மனித நேயமே தெருவிற்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சோனு சூட் வெளியிட்டுள்ள பதிவில், “மணிப்பூர் வீடியோ அனைவரையும் உலுக்கி விட்டது. இதில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது அந்த பெண் அல்ல, மனித நேயம்..:” என்று குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் கைது:
மணிப்பூர் வீடியோ வெளியானதை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டதாக அம்மாநில நிர்வாகம் தெரிவித்திருந்தது. இது குறித்து மே 4ஆம் தேதியே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் ஜூன் 21ஆம் தேதிதான் இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கலவரத்தில் பல பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெண்களை நிர்வாணமாக ஊர்வலத்தில் அழைத்து சென்ற புகாரில், போராட்டக்காரர்கள் அதற்கு முன்னர் ஒரு ஆணை கொன்றுள்ளதாகவும் பின்னர் இரண்டு பெண்களை வலுக்கட்டாயாமக நிர்வாணப்படுத்தியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Manipur Violence: மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர சம்பவத்திற்கு காரணமான ஒருவர் கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ