ஜாக் and ஜில் படபிடிப்புத்தலத்தில் நடிகை மன்சூ வாரியர்க்கு படுகாயம் அடைந்ததில் மருத்துவமனையில் அனுமதி....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் மஞ்சு வாரியர். இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட மஞ்சு வாரியர், தற்போது திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதால் மீண்டும் நடித்து வருகிறார்.


ஜோதிகா தமிழில் நடித்த ‘36 வயதினிலே’ படத்தின் ஒரிஜினல் வெர்சனில் மஞ்சு வாரியர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது பல மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர், ‘ஜாக் அண்ட் ஜில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்திருக்கிறது.


இந்த நிலையில், சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும் போது மஞ்சு வாரியருக்கு அடிபட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் படப்பிடிப்பு தளத்தில் பயங்கரமான விபத்து ஏற்பட்டதாகவும், அதில் சிக்கிய மஞ்சு வாரியருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மஞ்சு வாரியாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.