மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்ச்சையில் சிக்கிய மாமன்னன் திரைப்படம்.


மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படம் குறித்த தனது கருத்தினை கூறினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த படத்தை வெளியிட தடை கேட்டு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் இருப்பதாகவும், மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில் பக்ரீத் திருநாளான இன்று மாமன்னன் படம் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியான போதிலிருந்தே ரசிகர்கள் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தனர். இதற்கு சிலர் பாசிடிவாகவும் பலர் நெகடிவாகவும் விம்ரசனங்களை கொடுத்துள்ளனர். அந்த விமர்சனங்களை இங்கே பார்க்கலாம்.


தனுஷ் விமர்சனம்..


’கேப்டன் மில்லர்’ நாயகன் தனுஷ் நேற்று மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் தனது விமர்சனத்தை பதிவிட்டிருந்தார். அதில், மாரி செல்வராஜ், உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில் என அனைவரையும் பாராட்டி இருந்தார். ஏ.ஆர் ரஹ்மானின் இசையையும் புகழ்ந்து தள்ளியிருந்தார்.



மேலும், ’இடைவேளை காட்சியில் தியேட்டர் அதிரப்போகிறது’ என்றும் குறிப்பிட்டிருந்தார். தனுஷின் இந்த விமர்சனத்தை பார்த்த ரசிகர்கள், படம் நன்றாகத்தான் இருக்கும் என யூகித்தனர். 


மேலும் படிக்க | பளிங்கு சிலையாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்..வைரலாகும் புகைப்படங்கள்..!


“அணையாய் உடைத்தெறிந்த மாரி செல்வராஜ்..”


மாமன்னன் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில், “பல நூறு ஆயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்படும் ஒருவனுக்குள் சிறுகச்சிறுக சேர்ந்த வலி” என மாமன்னன் படம் குறித்து குறிப்பிட்டுள்ளார். 



”சுமாருக்கும் கீழ்..”


ஒரு சிலர் படத்தில் மாரி செல்வராஜின் வலியை பற்றி பேசிக்கொண்டிருக்க இன்னும் சில ரசிகர்கள் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் குறித்தும் கதையின் நேர்த்தி குறித்தும் பேசி வருகின்றனர். ஒரு ரசிகர் படம் சுமாருக்கும் கீழ் ரகம் என குறிப்பிட்டுள்ளார். 



”எல்லாமே சிறப்பு..”


மாரி செல்வராஜ் சர்ச்சையில் சிக்கினாலும், அவருக்கான ரசிகர் கூட்டம் இன்னும் பெருகிக்கொண்டுதான் போகிறது. ஒரு ரசிகர், படத்தில் எல்லோருமே நன்றாக நடித்துள்ளதாகவும் பிண்ணனி இசையும் ஒளிப்பதுவும் படத்தை வேறு ரகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 



”கவனம் ஈர்க்கக்கூடிய காட்சிகளே இல்லை..”


மாரி செல்வராஜ் திரைப்படங்கள் முதலில் மெதுவாக ஆரம்பித்து போகப்போகத்தான் வேகமெடுக்கும் என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால், இங்கு ஒரு ரசிகர் படத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு காட்சி கூட இல்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 



”ஓவர் முர்போக்கு..”


மாரி செல்வராஜ் தனது படங்களில் சாதிய அடக்குமுறை, சமூகத்திற்கு தேவையான கருத்துகள், முற்போக்கு கருத்துகள் என அனைத்தையும் கூறியிருப்பார். இது முன்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. ஆனால் அதையே ஒரு ரசிகர் “ட்ரோல் மெட்டீரியல்” என குறிப்பிட்டுள்ளார். 



“படத்தின் நிறை குறைகள்...”


பலர் பலவகையான விமர்சனங்களை கூற, ஒரு ரசிகர் படத்தின் நிறை மற்றும் குறைகளை அலசியவாறு ஒரு ட்வீட்டினை வெளியிட்டுள்ளார். அதில் படத்தில் கவனிக்கப்பட வேண்டியவையாக வடிவேலு, ஃபகத் ஃபாசில், திரைக்கதை, இடைவேளை காட்சி என பலவற்றை கூறியுள்ளார். நெகடிவாக இரண்டாம் பாதியில் படம் நீளமாக இருப்பதை கூறியுள்ளார். 



இவ்வாறு பல விமர்சனங்கள் வந்துள்ளதை ஒட்டி, இவைதான் உண்மையாகவே ரசிகர்களின் உணர்வா அல்லது மாரி செல்வராஜ் செய்த சம்பவம் இப்படி வேறு விதமாக பிரதீபலிக்கிறதா என்பது தெரியவில்லை.


மேலும் படிக்க | நடிகை அசினுக்கு விவாகரத்தா? அவரே சொன்ன பதில் இதோ!