மாரி சீரியல்: ஹாசினியை காப்பாற்ற சூர்யாவும் மாரியும் போடும் திட்டம் என்ன?
Mari Serial Zee Tamil: ஹாசினியை வைத்து ஜாஸ்மின் கொடுத்த வார்னிங்.. மாரி எடுத்த முடிவு - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜாஸ்மின் ஹாசினியை கடத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மாரி சீரியலில் முக்கியமான கதாபாத்திரமான ஜாஸ்மின், சூர்யாவுக்கு போன் செய்து ஹாசினியை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறாள். மாரி இங்க வரணும், இல்லை என்றால் ஜாஸ்மினை கொன்னுடுவேன் என்று மிரட்ட சூரியா அதிர்ச்சி அடைகிறான். இந்த விஷயம் மாரிக்கும் தெரியவர அவளும் ஷாக் ஆகிறாள். ஹாசினியை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறாள்.
மேலும் படிக்க | கொளுத்தி போட்ட புவனேஷ்வரி.. ட்விஸ்ட் கொடுத்த ரகுராம்: சந்தியா ராகம்
தாரா ஜாஸ்மினுக்கு போன் செய்து நீ என்ன பண்ணிட்டு இருக்க, என்னதான் இருந்தாலும் அவ அரவிந்தோட மனைவி அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை சும்மா விடமாட்டேன் என்று கோபப்பட, ஹாசினிக்கு எதுவும் ஆகாது, மாரியை கொல்லனும் அதுக்குதான் இந்த பிளான் என்று சொல்கிறாள்.
அடுத்ததாக மாரி ஹாசினியை காப்பாற்றுவதாக ஜாஸ்மின் சொன்னபடி நான் போறேன் என்று முடிவெடுக்க ஜெகதீஷ் அவளை தனியாக அழைத்து சென்று பாதுகாப்பிற்காக தன்னுடைய துப்பாக்கியை எடுத்து கொடுக்கிறார். துப்பாக்கியுடன் மாரி ஜாஸ்மினிடம் செல்ல முடிவெடுக்கிறாள்.
தமிழ் மொழி சூப்பர்நேச்சுரல் தொலைக்காட்சித் தொடரான மாரி சீரியலில் ஆஷிகா படுகோன், ஆதர்ஷ் எச்.எஸ், சோனா ஹைடன் , சாதனா மற்றும் சிவ சுப்ரமணியன் ஆகியோர் நடித்துள்ளனர் மற்றும் வி. சதாசிவம் இயக்கியுள்ளார். இந்தத் தொடரின் முக்கிய சதி பெங்காலி மொழி ஜீ பங்களாவின் தொடரான திரிநயனியிலிருந்து எடுக்கப்பட்டது.
எதிர்காலத்தை கணிக்கக்கூடிய மாரி என்ற பெண்ணின் கதை. இது ஜீ தமிழில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவருகிறது.
மாரி, ஒரு எளிய சிறிய நகரப் பெண்ணின் கதை. பேய்களைப் பார்க்கவும் தொடர்பு கொள்ளவும் முடியும், எதிர்காலத்தைப் பார்க்கவும், வரவிருக்கும் ஆபத்துக்களை முன்னறிவிக்கவும் முடியும் பெண் மாரி.
மேலும் படிக்க | சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்ட திருநங்கை
சூர்யாவின் தாய் இறந்துவிட்டார், அவள் மாரியை ஒரு ஆத்மாவாகப் பார்க்கச் சென்றாள், அவளுடைய மகனுக்கு மரணத்திலிருந்து உதவ அவள் மகிழ்ச்சியடைந்தாள். அவள் வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையில் சூர்யாவை மணந்து அவனுக்கு வாழ்க்கைத் துணையாக மாறுகிறாள்.
இப்படி சுவாரசியமான பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் மாரி தொலைகாட்சித் தொடரில் அடுத்ததாக நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய ஆவலாக இருக்கிறதா? மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ