Maruthi Nagar Police Station Review: தமிழில் வார வாரம் புது புது படங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படம் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது.  தயால் பத்மநாபன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ், சுப்ரமணிய சிவா, யாஷ் ஷெட்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ருதி நாயக், ஜோ சைமன், பாலாஜி, சந்திரா சூட் என பலர் நடித்துள்ளனர்.  மணிகாந்த் கத்ரி இசையமைக்க, தயால் பத்மநாபன் பாடல்கள் எழுதியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தின் தொடக்கத்தில் மகத் இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குழந்தையை ரவுடி கும்பல் கடத்திச் செல்வதை பார்க்கிறார், இதனை யாருக்கும் தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து அருகில் உள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் செய்கிறார்.  ஆனால் அந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் ரவுடி கும்பலுடன் தொடர்புடையவர் என்பதால் மகத் அன்று இரவே கொலை செய்யப்படுகிறார்.  தனது நண்பனின் இறப்பிற்கு பழிவாங்க வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், யாசர் மற்றும் விவேக் ராஜகோபால் திட்டமிடுகின்றனர். ஆனால் அவர்களை வேறொரு கும்பல் கொலை செய்து விடுகின்றனர். பின்பு இறுதியில் என்ன ஆனது என்பதே பாரதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தின் கதை.



மேலும் படிக்க | ‘பருத்திவீரன்’ புகழ் செவ்வாழை ராசு காலமானார்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்!


பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரியே அவர்களுக்கு எதிராக திரும்பினால் என்ன நடக்கும்? நீதி கிடைக்காமல் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்தால் என்ன ஆகும் என்பதை உணர்த்தும் விதமாக க்ரைம் தில்லர் வடிவில் படத்தை கொடுத்துள்ளார் தயால் பத்மநாபன். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் எஸ்ஐ-யாக நடித்துள்ளார்.  ஒரு போலீஸ் அதிகாரியாக தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் சிறப்பாக நடித்துள்ளார்.  சொல்லப் போனால் படத்தின் கதையே அவரை சுற்றி தான் நடக்கிறது.  சந்தோஷ் பிரதாப்பிற்கு இந்த படத்தில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு போதுமான இடம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நன்றாக நடித்துள்ளார்.  இரண்டாம் பாதியில் வரும் ஆரவ் ஏசிபி-யாக நடித்துள்ளார்.  இவர் வந்த பிறகுதான் படத்தில் பல ட்விஸ்ட் நடக்கிறது.  ஒரு போலீஸ் அதிகாரியாக அதே உடல் வாகுடன் கச்சிதமாக பொருந்தி உள்ளார் ஆரவ் .  நடிப்பில் மட்டும் இன்னும் சற்று கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.  



படத்தின் பெரும்பாலான காட்சி போலீஸ் ஸ்டேஷனையே சுற்றி நடக்கிறது, இருப்பினும் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை.  அதேபோல் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் இரண்டு மர்மமான மரணங்களுக்கு யார் காரணமாக இருப்பார்கள் என்ற கேள்வியும் கடைசிவரை படம் பார்ப்பவர்களுக்கு எழுகிறது, இது படத்தை மேலும் பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது.  பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம், ஆங்காங்கே புஷ்பா படத்தின் பின்னணி இசையும் கேட்கிறது.  பரபரப்பான கிரைம் த்ரில்லர் படங்களில் இருக்கும் அதே பிரச்சினை தான் பாரதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்திலும் உள்ளது.  சில இடங்களில் லாஜிக் மீறல்களும் உள்ளது.  மேலும் ஐந்து நண்பர்களுக்கு இடையிலான நட்பும் பெரிதாக காட்டப்படவில்லை என்பதால் அவர்களின் நோக்கமும் சரியாக எடுபடவில்லை. கிரைம் த்ரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் ஒரு நல்ல டைம் பாஸ் ஆக இருக்கும்.


மேலும் படிக்க | Aishwarya Rajesh: “ராஷ்மிகாவை நான் குறைகூறவில்லை..” புஷ்பா பட ஸ்ரீவள்ளி சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா விளக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ