நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலின் பாேது புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் நான் நன்றாக நடித்திருப்பேன் என்று கூறினார். இது தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, பல ஊடகங்கள் இவர் ராஷ்மிகாவின் நடிப்பை புஷ்பா படத்தில் குறை கூறுவது போல தகவல்களை பரப்பினர். இதனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதற்கு விளக்கமளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரம் குறித்து கூறிய நிலையில் இந்த செய்தி வைரலாக பரவியது. இதையடுத்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இது குறித்த விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
From the desk of Aishwarya Rajesh#AishwaryaRajesh @aishu_dil pic.twitter.com/J78oNsWQ9B
— Yuvraaj (@proyuvraaj) May 17, 2023
“என் மீது எல்லோரும் வைத்துள்ள அன்பிற்கும் எனது படங்களுக்கு அனைவரும் அளித்து வரும் பேராதரவிற்கு முதலில் நன்றி கூறுகொள்கிறேன். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் என்னிடம் “தெலுங்கு திரைப்படங்களில் எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “எனக்கு தெலுங்கு திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும் என்றும் எனக்கு விருப்பமான கதாப்பாத்திரங்கள் கிடைத்தால கண்டிப்பாக தெலுங்கு படங்களில் நடிப்பேன்” என்று கூறினேன்.
“ராஷ்மிகாவை குறை கூறவில்லை..
(ஐஸ்வர்யா ராஜேஷின் விளக்கம் தொடர்ச்சி..)
“தெலுங்கு படங்களில் பிடித்த கதாப்பாத்திரத்திற்கு உதாரணமாக புஷ்பா படத்தில் வந்த ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தை பிடிக்கும்” என கூறினேன். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக எனது பதில் பலருக்கும் தவறான அர்த்தத்தை உணர்த்திவிட்டது. புஷ்பா படத்தில் நடித்திருந்த ராஷ்மிகாவின் அளப்பறிய நடிப்பை நான் குறை கூறியது போல பலர் புரிந்து கொண்டனர். நான் ராஷ்மிகாவின் நடிப்பை எப்போதுமே ரசித்திருக்கிறேன். சக நடிகர்-நடிகைகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன்.
“வதந்தியை பரப்புவதை நிறுத்துங்கள்..”
(ஐஸ்வர்யா ராஜேஷின் விளக்கம் தொடர்ச்சி..)
““இதனால் இது போன்ற வதந்திகள் பரப்புவர்களை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு பொருத்தமான கதாப்பத்திரங்கள் குறித்து நான் கூறிய விஷயத்தை இது போன்ற தவறான செய்திகளாக பரப்பாதீர்கள்” என்று தனது ட்விட்டர பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார் ஐஸ்வர்யா.
தொடரும் ஃபர்ஹானா சர்ச்சை..
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து சமீபத்தில் வெளியான ஃபர்ஹானா படம், தொடர்ந்து பலவிதமான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கதையல்ல..
ஃபர்ஹானா படத்தை பார்த்தவர்களும் விமர்சகர்களும் சர்ச்சைக்குரிய வகையில் அப்படத்தில் ஒன்றும் இல்லை என கூறினாலும். ஏதாவது ஒரு காரணத்தை கூறி இந்த படத்தை காலி செய்வதிலேயே பலர் குறியாக உள்ளனர். இப்படி பல வகைகளிலும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், புதிதாக ராஷ்மிகா ரசிகர்களின் எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளார். ஆனால் இது பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா எந்தவித எதிர் கருதும் தெரிவிக்கவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ