கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தமிழில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் "வெந்து தணிந்தது காடு". விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் - சிம்பு கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் (Vendhu Thanindhathu Kaadu) கயாடு லோஹர், ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு (Simbu) தனது உடல் எடையை குறைத்த பிறகு ஈஸ்வரன் மற்றும் மாநாடு போன்ற படங்களில் நடித்தார். மாநாடு படம் வெற்றிநடை போட்டதோடு, இவருக்கு நல்லதொரு திருப்புமுனையாகவும் அமைந்தது. அதனையடுத்து புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு, அதன்படி சிம்புவும், கௌதம் மேனனும் இணைந்தனர்.


ALSO READ | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் வெளியீடு!


பின்னர் சில காரணங்களால் அந்த படத்தின் முயற்சி கைவிடப்பட்டு "வெந்து தணிந்தது காடு" படத்தின் மூலம் இவர்கள் இணைந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது. இப்படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அத்துடன் இப்படம் ஒரு சுவாரசியமான, ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு டீசர் மிரட்டலாக வெளிவந்திருக்கிறது. 


இந்த நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.



மேலும் இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட களமிறங்கும் படங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR