உயிருடன் வந்த மீனாட்சி..வெற்றியை ‘சப்’என அறைந்த சக்தி..மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களுள் ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. பெண்கள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
இதுவரை நடந்த சம்பவங்கள்:
மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இதுவரை இதுவரை ஒளிபரப்பான எபிசோடுகளில், நடந்த விஷயங்களை பார்க்கலாம். பஞ்சாயத்தில் யமுனா தாலியை கழற்றி பாலில் போட வேண்டும் என்று தீர்ப்பு தருகிறார்கள். புஷ்பாவும் இதே பஞ்சாயத்தில் எனக்கும் ஒரு தீர்ப்பு சொல்லி விடுங்கள் மீனாட்சி வரவில்லை மீனாட்சி அஸ்தி தான் வந்தது மூன்று பெண்களையும் மீனாட்சி மெஸ்சை விட்டு வெளியேறச் சொல்லுங்கள் என்று கூற, மீனாட்சியில்லாததால் வாங்கிய கடனுக்கு மூன்று பெண்களும் மெஸ்சை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று பஞ்சாயத்தில் சொல்கிறார்கள்.
வேறு வழி இல்லாமல் யமுனா துர்கா அழுது கொண்டே இருக்க அப்போது புஷ்பா இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் என் தம்பி சங்கிலியை துர்கா கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். யமுனா சாந்தா என யாரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இங்கே பூஜாவால் ரூமில் அடைக்கப்பட்டிருந்த சக்தி ரூமை திறந்து கொண்டு வெளியேறி பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு ஓடி வருகிறாள். சக்தி வருவதற்குள் புஷ்பா துர்காவை இறுதியாக கேட்க, மீனாட்சி மெஸ்சை காப்பாற்றவும் யமுனாவின் தாலியை காப்பாற்றவும் சங்கிலியை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறாள். அடுத்து என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
மேலும் படிக்க | The Kerala Story: கேரளா ஸ்டோரி படம் எப்போது OTTயில் வெளியாகும்? லேட்டஸ்ட் அப்டேட்!
இன்றைய எபிசோட்:
மீனாட்சி பொண்ணுங்க தொடரின் இன்றைய எபிசோடில், பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு இறந்து விட்டதாக சொன்ன மீனாட்சி உயிருடன் இறங்குகிறாள். இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பஞ்சாயத்தில் புஷ்பாவின் பணத்தை தந்து விடுகிறேன் எனவும், யமுனாவை தன்னுடனேயே அழைத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு மூன்று பெண்களுடன் மீனாட்சி வீட்டிற்கு போகிறாள்.
மறுபக்கம் மீனாட்சி எப்படி உயிருடன் வந்தால் என்று புஷ்பா சங்கிலியை கேட்க அவள் எப்படி தப்பினாள் புரியவில்லை என்று கூற, அவளை விடக்கூடாது என்று புஷ்பா கூறுகிறாள். பிறகு மீனாட்சி வீட்டில் விளக்கேற்றி மூன்று பெண்களையும் நல்ல முறையில் வாழ வைப்பேன் என சாமி கும்பிடுகிறாள். மீனாட்சியை காப்பாற்றியதால் சக்தி தன்னை பாராட்டுவாள் என்று காத்துக் கொண்டிருந்த வெற்றியிடம் சக்தி அம்மா உயிருடன் இருப்பதை ஏன் கூறவில்லை நாங்கள் துக்கத்தில் இருந்தோம் என்று கூறி வெற்றியை அறைகிறாள். நான் கோபித்துக் கொண்டு போய் விடுவேன் என்று வெற்றி சொல்ல சக்தி நீ போ என்று சொல்ல வெற்றி உண்மையிலேயே கோபித்துக் கொண்டு போய் விடுகிறான்.
காணத்தவறாதீர்கள்..
இறந்து விட்டதாக நினைத்த மீனாட்சி மீண்டும் உயிருடன் வந்துள்ளார், ஹீரோ சக்தியை நாயகி பளார் என அறைகிறாள். இப்படி ட்விஸ்டிற்கு மேல் ட்விஸ்டாக கொட்டிக்கிடக்கும் மீனாட்சி பொண்ணுங்க தொடரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்...
புதிய மீனாட்சி..
இதுவரை மீனாட்சி பொண்ணுங்க தொடரில், மீனாட்சியாக நடிகை அர்ச்சனா நடித்து வந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரீரஞ்சினி இணைந்துள்ளார். இதனால், இந்த கதையில் இனி புதுப்புது பரிமானங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் ‘தெறி’ பட பாடல் பிரபல ஆங்கில வெப் தொடரில் ஒளிபரப்பு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ