வெற்றி கொடுத்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்
Meenakshi Ponnuga Serial: நேற்றைய எபிசோடில் ரங்கநாயகி நீதிமணியுடன் சுமங்கலி பூஜைக்கு வர சொல்லியிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரங்கநாயகி நீதிமணியுடன் சுமங்கலி பூஜைக்கு வர சொல்லியிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீட்டுக்கு வரும் சக்தியிடம் மீனாட்சி, ‘நீதிமணி ஃபங்ஷனுக்கு வர ஒத்துக்கொண்டுவிட்டார்’ என்று சொல்ல, இதில் ஏதோ சதி இருக்கிறது என்று சக்தி சொல்கிறாள். ஆனா மீனாட்சி அதை ஒத்துக்கொள்ளவில்லை.
மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகள்! யார் யார் தெரியுமா?
பங்க்ஷனுக்கு பத்திரிகை எழுதும்போது அதில் சக்தி பெயரும் அசோக் பெயரும் வரக் கூடாது என்று ரங்கநாயகி சொல்ல, வெற்றி கோபமாகி தன் பெயரும் தேவையில்லை என்று சொல்ல, சரண்யாவும் அப்படியே சொல்ல, யாருடைய பெயரும் தேவை இல்லை, என் பேரும் செல்வமுருகன் பேரும் போதும் என்று ரங்கநாயகி சொல்லி விடுகிறாள்.
இதனை தொடர்ந்து ரங்கநாயகி குடும்பத்துடன் புடவை எடுக்கப் போகிறாள். சரண்யா சொல்லி சக்தியும் அங்கே வருகிறாள். சக்தி யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கிறாள். ரங்கநாயகி ஒவ்வொரு புடவையாக எடுக்க, சரண்யா யாருக்கும் தெரியாமல் சக்தியிடம் கருத்து கேட்க, சக்தி நல்லா இல்லை என்று சொல்ல, சரண்யா அந்த புடவை வேண்டாம் என்று சொல்கிறாள்.
பூஜா வேண்டாம் என்று சொல்லும் ஒரு புடவையை சக்தி ஓகே என்று சொல்ல, சரண்யாவும் சொல்ல, அதை கவனிக்கும் பூஜா, சக்தி சொன்ன புடவையே இருக்கட்டும் என்று முடிவெடுக்கிறாள். அந்த புடவையை பூஜா மேல் வைத்துப் பார்க்க ரங்கநாயகி முயலும்போது, சக்தி வந்து நிற்க, சக்தி மேல் ரங்கநாயகி வைத்துப் பார்க்கிறாள். ரங்கநாயகி அதிர்ச்சியாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ