காணமல் போன நீதிமணியின் நிலை என்ன? பல ட்விஸ்டுகளுடன் மீனாட்சி பொண்ணுங்க எபிசோட்..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுள் மிகவும் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மகளிர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது மீனாட்சி பொண்ணுங்க சீரியல். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
இதுவரை நடந்த சம்பவங்கள்..
நேற்றைய எபிசோடில் புஷ்பா தான் நீதிமணியை கொல்ல பார்த்தாள், என்று மீனாட்சி கூற புஷ்பா அதனை மறுக்கிறாள். நீதிமணியே வந்து சொன்னால் தான் குற்றம் நிரூபணம் ஆகும் என்று சொல்லி விட வெற்றி நீதிமணியை தேடுகிறான் . மீனாட்சியும் வெற்றியும் நீதிமணியை ஊர் ஊராகத் தேடுகிறார்கள். அதே போல் நீதிமணியை காணவில்லை என புஷ்பா, பேப்பரில் விளம்பரம் கொடுக்கிறாள். விளம்பரத்தை நீதிமணி பார்த்து, அருகில் இருக்கும் கோயில் பூசாரிக்கு தெரியாமல் கிழித்து போட்டு விடுகிறான்.
மேலும் படிக்க | தன்னைவிட 6 வயது கம்மியான ஹீரோவுக்கு ஜோடியாகும் திரிஷா!
விளம்பரம் கொடுத்த புஷ்பா நீதிமணி தனக்கு போன் செய்வான் என்று காத்திருக்கிறாள். அதே போல் வெற்றி ஷண்முகத்துக்கு ஆபத்து என விளம்பரம் கொடுக்க சக்தி வெற்றியிடம் இன்று அப்பா கட்டாயம் உனக்கு போன் செய்வார் என்று கூறுகிறாள். இதனையடுத்து சண்முகத்திற்கு என்ன ஆனது என்று நீதிமணி புஷ்பாவிடம் போன் செய்து விசாரிக்க, வெற்றி திட்டம் போட்டு விளம்பரம் கொடுத்து நீதிமணியை கூட்டிக்கொண்டு வந்து விடுவான் என புஷ்பாவுக்கு பயம் வருகிறது
இனி நடக்க இருப்பது..
நீதிமணியை கண்டுபிடிக்க வெற்றி, புஷ்பா இருவரும் பேப்பரில் விளம்பரம் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. வீட்டிற்கு வரும் சங்கிலி பேப்பரில் சண்முகம் சீரியஸாக இருக்கும் செய்தியை புஷ்பாவிடம் காட்ட புஷ்பா டென்ஷன் ஆகிறாள். அடுத்ததாக வெற்றி, மீனாட்சி என இருவரும் நீதிமணி தங்கி இருக்கும் கோவிலுக்கு சென்று நீதிமணியை சந்தித்து வீட்டிற்கு அழைக்க நீதிமணி வர மறுக்கிறான்.
பஞ்சாயத்தில் புஷ்பா நீதிமணியை மீனாட்சி கடத்தி இருப்பதாக நாடகமாடுகிறாள் என்று சொல்லியும் நீதிமணி வர மறுக்க மீனாட்சி, வெற்றி என இருவரும் அன்று இரவு அந்த கோவிலிலேயே தங்கி இருக்கின்றனர். இந்த விஷயம் அறிந்து நீதிமணியை கடத்துவதற்கு திட்டம் போடும் சங்கிலி போர்வையில் தூங்கிக் கொண்டிருக்கும் வேறொரு ஆளை நீதிமணி என்று நினைத்து கடத்திச் செல்கிறான். கடத்திய ஆளை புஷ்பாவிடம் ஒப்படைத்து போர்வை விலக்க உள்ளே வேறு ஆள் இருக்க புஷ்பா டென்ஷனாகிறாள். வெற்றி, மீனாட்சி இருவரும் கோவிலில் இருந்து ஊருக்கு கிளம்புகின்றனர்.
காணத்தவறாதீர்கள்..
தொடரில் தொடர்ந்து ட்விஸ்டிற்கு மேல் ட்விஸ்ட் வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மறக்காமல் இரவு 9.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | தனுஷின் 50வது படத்தில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்.. ஷூட்டிங் ஆரம்பம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ