மீனாட்சி பொண்ணுங்க: வெற்றி, சக்திக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ரங்க நாயகி செய்யப் போவது என்ன?
Meenakshi Ponnunga Today`s Episode Update: வெற்றி, சக்திக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ரங்க நாயகி செய்யப் போவது என்ன? மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.
மீனாட்சி பொண்ணுங்க : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடு புஷ்பா கைதாகி ஜெயிலுக்கு போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வெற்றி ரங்கநாயகியிடம் நான் சரண்யாவை பார்த்தேன், அவள் மாறிவிட்டாள் உங்களையும் விசாரித்தால் என்று சொல்ல ரங்கநாயகி சந்தோஷப்படுகிறாள்.
இதை பார்த்து அங்கே இருந்த புஷ்பாவும் சங்கிலியும் ரங்கநாயகி-சரண்யா இருவரும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்று யோசிக்கிறார்கள். சக்தி வெற்றியிடம் சரண்யாவிற்கு பூச்சூட்டு விழா செய்ய வேண்டும் அதை உடனே ரங்கநாயகியிடம் நல்ல முறையில் பேசி சம்மதம் வாங்க சொல்கிறாள்.
வெற்றியும் ரங்கநாயகியிடம் சரண்யாவுக்கு பூச்சூட்டு விழா செய்ய வேண்டும் என பேச , சகுந்தலா ஒப்புக் கொண்டால் அவள் வருவதாக இருந்தால் எனக்கு இதில் உடன்பாடு தான் என்று சொல்லி விடுகிறாள்.
வெற்றியும் சக்தியும் சீர்வரிசையுடன் சரண்யாவின் வீட்டிற்கு சென்று சகுந்தலாவிடம் பேசுகிறார்கள். ரங்கநாயகியின் வீட்டிற்கு பூச்சூடும் விழா செய்ய வரமாட்டேன் என் மகனும் வரமாட்டான் என்று சகுந்தலா கூறிவிட, சக்தியும் வெற்றியும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மீனாட்சி பொண்ணுங்க: : சீரியலை எங்கு பார்ப்பது?
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | “எதிர்பார்த்த மாதிரி இல்லையே..” ரசிகர்களை ஏமாற்றிய ஜெயிலர்? ட்விட்டர் விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ