Tamil Nadu Today Latest News Live Updates: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் (Parliament Winter Session) இன்றுடன் நிறைவடைகிறது. பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அமித்ஷாவுக்கு (Amit Shah) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராடி வருகின்றனர்.
மறுபுறம், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற தள்ளுமுள்ளு சம்பவத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.,கள் அளித்த புகாரில் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி (Rahul Gandhi) மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விடுதலை - 2' திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் விமர்சனங்கள் (Viduthalai 2 Review), அப்டேட்களை இங்கு காணலாம். ஹரியானாவில் நான்கு முறை முதலமைச்சராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சௌதாலா இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89.
அந்த வகையில், உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், விளையாட்டு, சினிமா, வணிகம், ஆன்மீகம், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் என இன்றைய (டிச. 20) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.