மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீனாட்சி பொண்ணுங்க : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலை சக்தி மற்றும் வெற்றி நடிப்பதை கையும் களவுமாக கண்டுபிடிக்க காரில் சங்கிலி மைக்கை பொருத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  


மேலும் படிக்க | கண்டிப்பாக கேட்க வேண்டிய தேவி ஸ்ரீ பிரசாத்தின் 6 ஹிட் பாடல்கள்..!



அதாவது காரில் வெற்றியும் ஷக்தியும் சங்கிலி செட்டப் செய்து வைத்திருக்கும் mike-ல் பதிவாவதற்காக சண்டை போடுவதை போல் நடிக்கிறார்கள். இதை மொபைல் போனில் கேட்டுக் கொண்டிருக்கும் பூஜா உண்மையான சண்டையென நம்பி விடுகிறாள்.


வெற்றியும் சக்தியும் சண்டை போடுவது உண்மைதான் என நினைத்து வெற்றியின் காரில் வந்து கொண்டிருக்கும் மீனாட்சி, யமுனா, துர்கா என மூவரும் வருத்தத்துடன் காரை விட்டு இறங்கி கொள்கிறார்கள். 



மீனாட்சியம்மா ரங்கநாயகியின் வீட்டிற்குச் சென்று வெற்றிக்கும் சக்திக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க ரங்கநாயகியின் வீட்டில் வந்து இருக்கும் புஷ்பாவும் பூஜாவின் அம்மாவும் வெற்றிக்கும் சக்திக்கும் பிரச்சனை என்று சொல்கிறார்கள்.



மீனாட்சி நேரடியாக வெற்றியை கேட்க எனக்கு சக்தியை பிடிக்கவில்லை பூஜாவை தான் பிடித்திருக்கிறது என்று சொல்லி விடுகிறான். இதனால் மீனாட்சி வருத்தத்துடன் கிளம்பும் போது சரளா, வெற்றிக்கு சக்தியை பிடிக்கவில்லை என முடிவான பிறகு வெற்றி கட்டிய தாலி சக்தியின் கழுத்தில் ஏன் இருக்க வேண்டும் என்று கேட்க மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மீனாட்சி பொண்ணுங்க: : சீரியலை எங்கு பார்ப்பது?


மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | திரைப்படமாக மாறுகிறது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு..! ஹீரோ யார் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ