மீனாட்சி பொண்ணுங்க: பூஜா கழுத்தில் தாலி கட்ட போகும் வெற்றி, ட்விஸ்ட் வைத்த நீதிமணி
Meenakshi Ponnunga Today`s Episode Update: பூஜா கழுத்தில் தாலி கட்ட போகும் வெற்றி, கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த நீதிமணி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.
மீனாட்சி பொண்ணுங்க : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் புஷ்பா கொடுத்த திட்டத்தின் படி வெற்றியை கோவிலுக்கு வரவைத்து பூஜாவின் கழுத்தில் தாலி கட்ட வைக்க திட்டமிட்டு உள்ள நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | எகிறிய மார்க்கெட்! கவினுக்கு போட்டிப் போடும் இளம் நாயகிகள்: ஸ்டார் பட அப்டேட்
மணக் கோலத்தில் பூஜாவும் வெற்றியும் உட்கார்ந்து இருக்க வெற்றி ஒன்றும் புரியாமல் முழிக்க சரளா தாலியை ஆசீர்வாதம் வாங்கி எடுத்து வரும்போது தான் கல்யாணம் என்று தெரிய வருகிறது. இதனால் வெற்றி கோபப்பட சரளா அவனது காலில் விழுந்து தாலியை மட்டும் கட்டிடு என கெஞ்சுகிறாள்.
மறுபக்கம் வெற்றிக்கும் பூஜாவுக்கும் கல்யாண ஏற்பாடு நடக்கும் விஷயம் அறிந்த நீதிமணி சக்தியிடம் வந்து விஷயத்தை சொல்ல கல்யாணத்தை நிறுத்துவதற்காக வரும் சக்தி வெற்றி மண கோலத்தில் இருப்பதை பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் நிற்க அவளுக்கு வெற்றி சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.
கோவிலுக்குள் புஷ்பா இருப்பதால் வெளியே காத்திருக்கும் நீதிமணி மனமுடைந்து வெளியே வரும் சக்தியிடம் நீ கவலைப்படாமல் வீட்டுக்கு போ.. இந்த கல்யாணத்தை நான் தடுத்து நிறுத்துகிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
அதன் பிறகு அவர் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுக்க கோவிலுக்கு விரைந்து வரும் போலீஸ் பாம் இருப்பதாக சொல்லி அனைவரையும் கலைந்து செல்ல செல்கின்றனர்.
உடனே வெற்றி மணமேடையில் இருந்து எழுந்து கொள்ள பூஜா அவனது கையை பிடித்து தாலியை மட்டும் கட்டிவிட்டு போ என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மீனாட்சி பொண்ணுங்க: : சீரியலை எங்கு பார்ப்பது?
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | ஜெயிலர் ஓவியம் வரைந்து உலக சாதனை! ரஜினிகாந்துக்கு தமிழ் சினிமா ரசிகரின் பரிசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ