புஷோன் இன்டர்நேஷனல் ஃபேண்டஸ்டிக் திரைப்பட விழாவில் தென்னிந்திய திரைப்படங்களான எஸ்ரா, மெர்சல் மற்றும் ஜெய் லாவா குசா ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டுக்கான புஷோன் இன்டர்நேஷனல் ஃபேண்டஸ்டிக் திரைப்பட விழா ஜூலை 12 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவில் பல படங்களுக்கு விருதுகள் கிடைத்தது. அதில், தென்னிந்திய திரைப்படங்களான எஸ்ரா, மெர்சல் மற்றும் ஜெய் லாவா குசா போன்ற மூன்று திரைப்படங்களும் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டது.


அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான `மெர்சல்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படம் ஒரு அதிரடி த்ரில்லர் படமாகும். அதே சமயம் படத்தின் ஒரு சில காட்சிகளால் பெரும் சர்ச்சை வெடித்தது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி, கோரக்பூர் மரணம், மருத்துவத்துறையின் ஓட்டைகள் உள்ளிட்டவற்றைக் குறித்தும் படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இப்படத்தின் வசூல் ரூ.250 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.


எஸ்ரா திரைப்படம் மலையாள திரைப்படமாகும். இப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் ப்ரதிவிராஜ் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஒரு சூப்பர்நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஜெய் கே இயக்கியுள்ளார். இப்படத்தில், பிரியா ஆனந்த் நடிப்பில் சுஜித் ஷங்கர், விஜயராகவன், சுதேவ் நாயர் மற்றும் அன் ஷீட்டல் ஆகியோருடன் நடித்து நடித்துள்ளார். இப்படத்தின் வசூல் ரூ.50 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.


தெலுங்கு திரைப்படமான ஜெய் லாவா குசா. இப்படம் ஒரு செயல் நாடக திரைப்படம். இப்படத்தை இயக்குனர் கே.எஸ். ரவீந்திராஇயக்கியுள்ளார். இப்படத்தில் ராணி கன்னா மற்றும் நவீதா தோமஸ் ஆகியோருடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். ஜெய் லாவா குசா திரைப்படம் ரூ.175 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. 


இத்திரைப்படவிழாவில் மூன்று தென்னிந்திய திரைப்படங்களை தவிர மூன்று மூன்று ஹிந்தி திரைப்படங்களும் திரையிடபட்டுள்ளது. செகிரெட் சூப்பர்ஸ்டார், மாம் மற்றும்  டிகேர் ஜிந்தா ஹை போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது.