விஜய் - சமந்தா காம்போவில் `நீதானே` பாடல் டீசர்- பார்க்க
மெர்சல்' படத்தின் அடுத்த சிங்கள் ட்ராக் "நீதானே டீசர்" இன்று வெளியானது. ஆனால் முழு பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இப்படத்தின் ஆளப்போறான் தமிழன் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலலையில் இன்று 6 மணிக்கு அடுத்த பாடலாக "நீதானே" வெளியாக உள்ளடக்க படக்குழு அறிவித்துள்ளது. தற்போது "நீதானே" பாடலின் டீசர் வெளியாகி உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'மெர்சல்' பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த மெர்சல் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"நீதானே டீசர்" பாடல் பார்க்க:-