தீபாவளி நெருங்கி வரும் நிலையில் விஜய்' ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் எதிர்ப்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் காத்துருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ’மெர்சல்’ வெளியாகவுள்ளது.  அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். 


இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். 


முன்னதாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையினை கைப்பற்ற மூன்று முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் பலத்த போட்டி நிலவியது. இறுதியில் ஜீ தமிழ் தொலைக்காட்சி வெற்றிபெற்றது. 


இந்நிலையில் விஜய்யின் மெர்சல் படம் மொத்தம்  சுமார் 3292 திரைகளில் வெளியாக இருபதாக தகவல் வெளிவந்துள்ளது. இவ்வளவு எதிர்ப்பார்ப்புடன் வெளியாக இருக்கும் இப்படம் ஹிட் ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம் அக்டோபர் 18 வரை.