‘மெர்சல்’ அமெரிக்கா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் அமெரிக்கா வெளியீட்டு உரிமையை தமிழ் படங்களை அமெரிக்காவில் விநியோகம் செய்யும் நிறுவனமான யுஎஸ் தமிழ் எல்எல்சி நிறுவனமும், அட்முஸ் (ATMUS) எண்டர்டெயின்மெண்ட் நிறுவணும் இணைந்து கைப்பற்றியுள்ளது என ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சமீபத்தில், படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.