அக்டோபர் 18-ம் தேதி 'மெர்சல்' வெளியீடு உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். மேலும் சுமார் 3.292 க்கு மேற்பட்ட திரையரங்களில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கபடுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் ‘மெர்சல்’


இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். 


இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். 


ஏற்கனவே பல சாதனைகளை செய்து வரும் 'மெர்சல்' படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.