#MeToo லீனா சொல்வது பொய்.. சுசிகணேசனுக்கு ஆதராக குரல் கொடுக்கும் மனைவி
#Metoo இயக்கத்தை தவறாக பயன்படுத்தும் சிலர்... தன் கணவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மஞ்சரி சுசிகணேசன்
இயக்குநர் சுசிகணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக லீனா மணிமேகலை குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் இதற்கு திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மறுப்பு தெரிவித்ததோடு, லீனா மணிமேகலை மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். ஆனால் லீனா மணிமேகலை தரப்பில் இருந்து தொடர்ந்து இயக்குநர் சுசிகணேசன் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
தற்போது இச்சம்பவம் குறித்து சுசி கணேசன் லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால், அதற்க்கான ஆதரங்களை நீதிமன்றம் கேட்கும், மேலும் இரு தரப்பினரிடமும் விரிவாக விசாரணை மேற்கொள்ளப்படும். அப்பொழுது சுசிகணேசன் மீதான குற்றம்சாட்டி குறித்த ஆதாரங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சுசிகணேசன் மனைவி மஞ்சரி சுசிகணேசன், தன் கணவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுக்குரித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், "நான் மஞ்சரி சுசிகணேசன். நான் என் கணவருக்கு ஆதரவாக இருக்கிறேன். அவர் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். இது லீனா மணிமேகலையின் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் கற்பனையான குற்றச்சாட்டு ஆகும்.
எங்களுக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நாட்களில் அவர் (சுசி கணேசன்) ஒரு கணவராக, குழந்தைக்கு அப்பாவாக, சக மனிதர்களை மதிக்கும் கொள்கையும் தன்மையும் கொண்டவர்.
நான் வலுவாக #Metoo இயக்கத்தை ஆதரிக்கிறேன். ஆனால் எதிர்பாரதவிதமாக லீனா போன்ற சிலபேர் எந்தவித உண்மைத்தன்மை மற்றும் ஆதாரமும் இல்லாமல் இதை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
என் கணவர் மீதான குற்றச்சாட்டை ஒரு மனைவியாக சட்டபூர்வமாக எதிர்க்கொண்டு லீனா மணிமேகலையின் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வெளிசத்துக்கு கொண்டுவருவேன்.
இவரின் பொய்யான குற்றச்சாட்டால், எங்களுக்கு, பெற்றோருக்கு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ப்பட்ட மன உளைச்சலுக்கு லீனா மணிமேகலை பதில் சொல்லி ஆகவேண்டும்.
உண்மை தான் எப்போதும் வெற்றியடையும்.
இவ்வாறு இயக்குனர் சுசி கணேசன் மனைவி தெரிவித்துள்ளார்.