அமீர் நடிக்கும் நாற்காலி பட பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டார். எம்ஜிஆர் பாடல் என்று பிரபலமாகியுள்ள நெஞ்சமுண்டு நெர்மையுண்டு பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளியிடப்பட்டதை அடுத்து படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் படத்தில் அமீருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா ஆகியோரும் நடித்துள்ளனர்.


திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் நடிகருமான அமீர் (Ameer), இந்த படத்தில் பங்கு வகிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என்று கூறினார். இது குறித்து கூறுகையில், அவர், “எம்.ஜி.ஆர், சினிமா மற்றும் அரசியல் இரண்டையும் பற்றி நினைக்கும் போது நம் நினைவுக்கு வரும் ஒரு ஆளுமை. எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் அவரை மதித்து அவரது திரைப்படங்களை ரசிக்கும் அளவுக்கு அவரது புகழ் இருந்தது. அவரது படங்கள் ரிலீஸ் ஆன நாளிலேயெ அவற்றைப் பார்த்த நல்ல நினைவுகள் எனக்கு உள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, வெவ்வேறு தலைமுறையினருக்கும் அவர் மீது இருக்கும் மரியாதையும் புகழும் வியக்க வைக்கிறது. அவரிடம் சுட்டிக்காட்டும் அளவிற்கு எந்த ஒரு எதிர்மறையான விஷயங்களும் இல்லை என்பதே அவர் எவ்வளவு நல்ல மனிதராக இருந்துள்ளார் என்பதற்கு ஒரு சான்றாகும்.” என்று தெரிவித்தார்.



ALSO READ: MGR பலரின் இதயங்களில் வாழ்கிறார், அவருக்கு முன் நான் தலை வணங்குகிறேன்: PM Modi Tweet


எம்.ஜி.ஆர் (MGR), சிவாஜி கணேசன் போன்ற மாபெரும் ஜாம்பவாங்களுடன் இணைந்து பணி புரிய வாய்ப்பு கிடைக்காததற்கு வருத்தப்படுவதாக அமீர் மேலும் கூறினார். "நான் துணை இயக்கநராக பணிபுரிந்த நந்தா படத்தில் சிவாஜி ஐயா நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் பின்னர் அந்த வேடத்தில் ராஜ்கிரண் ஐயா நடித்தார். அதன் பிறகு எனக்கு அவருடன் பணிபுரியும் வாய்ப்பே கிடைக்கவில்லை” என்று அமீர் கூறினார்.


“ஆனால் எம்.ஜி.ஆரின் ரசிகராக நடிக்க எனக்கு நாற்காலியில் ஒரு வாய்ப்பு கிடைத்தபோது ​​நான் மகிழ்ச்சியடைந்தேன். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு (எம்.ஜி.ஆரின் 1970 திரைப்படமான என் அண்ணனின் வரிகள்) பாடலை எஸ்.பி பாலசுப்பிரமண்யம் (SP Balasubrahmanyam) பாடியுள்ளார்.” என்று அமீர் மேலும் தெரிவித்தார். SPB மக்கள் திலகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


“நான் நடிக்கும் படத்தில் SPB போன்ற ஒரு மிகப்பெரிய பாடகர் பாடியுள்ளது, SPB மறைவுக்குப் பிறகு அவர் குரலில் வெளிவரும் முதல் பாடலாக இந்த பாடல் இருப்பது, அது எம்ஜிஆர் பற்றிய பாடலாக இருப்பது, இவை அனைத்தும் ஒரு மிகப்பெரிய நல்ல இணைப்பாக எனக்குத் தோன்றியது. இந்த அனைத்து பெரிய மனிதர்களாலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். மேலும், தமிழகத்தில் (Tamil Nadu) ஒரு தனி பாடலை முதலமைச்சர் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்” என்றார் அமீர்.


ALSO READ: பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR