மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் காலமானார்!
மைக்கேல் ஜாக்ஸனின் தந்தை பாப்-இசை குடும்பத்தலைவரான ஜோ ஜாக்ஸன் 89 வயதில் காலமானார்!
மைக்கேல் ஜாக்ஸனின் தந்தை பாப்-இசை குடும்பத்தலைவரான ஜோ ஜாக்ஸன் 89 வயதில் காலமானார்!
கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜோமைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன், கடந்த 22 ஆம் தேதி லாஸ் வேகாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே காலாமானார்.
கடந்த 1928 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அர்க்கான்ஸஸ் மாகாணத்தில் பிறந்த ஜோ, மிகச்சிறந்த மேடை இசைக்கலைஞராக வலம் வந்தார். இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய இவர், தமது மகன் மைக்கேல் ஜாக்ஸனையும் சிறு வயதிலேயே இசை உலகித்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். மைக்கேலின் பெயர் இசை அரங்கத்தை ஆட்கொண்டதற்கு ஜோ முதன்மைக் காரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.