Kollywood News: தமிழக முதல்வரின் புதிய விதிக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்?
2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான `மிக மிக அவசரம்`, பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது.
Kollywood News: அண்மையில், தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின், பெண் காவல்துறையினர் சாலையோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பல பெண் காவலர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) அமல்படுத்தியுள்ள இந்த புதிய விதிக்கும், 'மிக மிக அவசரம்' என்ற தமிழ் படத்திற்கும் தொடர்பு உள்ளது. ஒரு முக்கியமான ஆனால் அதிகம் பேசப்படாத கருப்பொருளை எடுத்துக்கொண்டு படம் எடுத்த, இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரும் சமூக ஊடகங்களில் அதிக பாராட்டுக்களைப் பெற்றனர். தற்போது மீண்டும் இப்படக்குழுவினரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான (Tamil Cinema) 'மிக மிக அவசரம்', பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது. சுரேஷ் காமாட்சி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபலங்கள் வரும்போது பாதுகாப்புக்காக சாலைகளில் நிற்கும்போது பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ:Yogi Babu: முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் யோகி பாபு
இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் (Box Office) பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், இயக்குனர் சுரேஷ் காமாட்சி நிஜ வாழ்க்கைக்கு பொருந்தும் வகையில், ஒரு சமூக செய்தியை கூறும் படத்தை இயக்கியதில் பெருமிதம் கொள்கிறார்.
பெண் காவலர்களின் நிலைமையை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதல் தரும் உத்தரவை பிறப்பித்ததற்காக இயக்குனர் சுரேஷ் காமாட்சி தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
'மிக மிக அவசரம்' படத்தில் ஸ்ரீ பிரியங்கா மற்றும் ஹரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதையை கே.பி ஜெகன் எழுதியுள்ளார். இஷான் தேவ் இப்படத்திற்கு இசையமைத்துக்ள்ளார். படத்தின் ஒளிப்பதிவை பாலபராணி கையாண்டுள்ளார்.
ALSO READ: Kamal Haasan-னின் விக்ரம் படம்: மாஸ் அப்டேட் அளித்த லோகேஷ் கனகராஜ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR