Kamal Haasan-னின் விக்ரம் படம்: மாஸ் அப்டேட் அளித்த லோகேஷ் கனகராஜ்

தமிழக தேர்தலில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காமக் போயிருக்கலாம். ஆனால், ஒரு நடிகராக அவரை திரையில் காண அவரது ரசிகர்களுக்கு எப்போதும் ஆவல் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.   

Written by - ZEE Bureau | Last Updated : Jun 13, 2021, 02:57 PM IST
  • கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.
  • விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
  • லோகேஷ் கனகராஜ் இது குறித்த ஒரு பதிவை வெளியிட்டார்.
Kamal Haasan-னின் விக்ரம் படம்: மாஸ் அப்டேட் அளித்த லோகேஷ் கனகராஜ்

Kamal Haasan's Vikram Film Update: தமிழக தேர்தலில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காமக் போயிருக்கலாம். ஆனால், ஒரு நடிகராக அவரை திரையில் காண அவரது ரசிகர்களுக்கு எப்போதும் ஆவல் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. 

அவரது நடிப்பும் அவரது படைப்பாற்றலும் என்றும் தோற்றுப்போகாது என்றால் அது மிகையல்ல. இந்த நிலையில் அவரது வெற்றிப்படமான 'இந்தியன்' படத்தின் அடுத்த பாகமான 'இந்தியன் 2' படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். எனினும், படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைகா புரெக்ஷன்சுக்கு இடையில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாக இந்த படத்தில் சிக்கல் நிலவி வருகிறது.

'இந்தியன் 2' (Indian 2) படத்தின் நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கமலின் 'விக்ரம்' படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்படலாம் என்றும் செய்திகள் வந்தன. அனைத்து ஊகங்களையும் தெளிவு செய்யும் விதமாக, தற்போது லோகேஷ் கனகராஜ் ஒரு மாஸ் அப்டேட்டை அளித்துள்ளார். 'விக்ரம்' படக்குழுவில் ஸ்டண்ட் நடன இயக்குனர்கள் அன்பரிவு, அதாவது அன்புமணி மற்றும் அரிவுமணி ஜோடி இணையவுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

ALSO READ: Vikram Movie Update: விக்ரம் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் (Kamal Haasan), அன்புமணி, அறிவுமணி ஆகியோருடன் தானும் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில் நால்வரும் ஒரே போல், ஒரு கையை பாக்கெட்டிலும், ஒரு கையை வெளியிலும் வைத்துக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. 

இந்த புகைப்படத்தை வெளியிட்டு, லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் படம் குறித்த இன்னும் அதிக அப்டேட்டுகள் விரைவில் வரவுள்ளன என்றும் சூசகமாக கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 'விக்ரம்' (Vikram) படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ALSO READ: Family Man 2 தொடரை பார்த்த இலங்கை தமிழர்களின் எதிர்வினை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News