மலையாள சினிமாவில் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ’மின்னல் முரளி’ (Minnal Murali). இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பாசில்ஜோசப் படத்தை இயக்கியுள்ளார். மாயாஜால மந்திரர்களாகவும், அசகாய சூரர்களாகவும் காட்டப்பட்ட சூப்பர் ஹீரோக்களை எளிய மனிதர்களின் பின்புலத்தில் இருந்து காட்டியிருக்கிறார் இயக்குநர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | சமந்தாவுடன் விஜய்சேதுபதியின் ரொமான்ஸ்...! காத்துவாக்குல ரெண்டு காதல் Next Single.!



டோவினோ தாமஸ் ஜெய்சனாகவும், குரு சோமசுந்தரம் சிபுவாகவும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். 2021-ன் சிறந்த படத்துக்கான ஐஎம்டிபி வரிசையில் இப்படம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. காதலோடு நகரும் கதையும், நாயகர்களின் வாழ்வியலோடு பின்னிபினைந்திருக்கும் சூப்பர் பவரும், படம் பார்ப்பவர்களை ரசிக்கவைப்பதுடன். கதையோடு ஒன்றி பயணிக்கவும் வைக்கிறது. அமெரிக்கா செல்லும் கனவில் இருக்கும் ஜெய்சனுக்கும், டீக் கடையில் வேலை பார்க்கும் சிபுவுக்கும் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி சூப்பர் பவர் கிடைக்கிறது. அவர்கள் தங்களுக்கு கிடைத்த சூப்பர் பவரை எப்படி பயன்படுத்துகிறார்கள்? என்பதே படத்தின் கதை.





விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்லும் மின்னல் முரளி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஜெய்சன், மாமாவை தூக்கி வீசும் காட்சியை எப்படி படமாக்கியிருக்கிறார்கள் என்ற காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தை ஆர்வமுடன் பார்த்த ரசிகர்கள், இந்த மேக்கிங் வீடியோவையும் அதே ஆர்வத்துடன் ரசித்து மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.



ALSO READ | கொரோனா பரவல்; தள்ளிவைக்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR