Tamil Nadu Lok Sabha Election Result 2024 Live Update: திராவிட மாடல் ஆட்சி.. அள்ளிக் கொடுத்த தமிழ் மக்கள்..

Tamil Nadu Lok Sabha Election Result 2024: இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. 

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2024, 02:23 PM IST
    Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024 முடிவுகளின் அப்டேட்கள் உடனுக்குடன் இதோ...!
Live Blog

Tamil Nadu Lok Sabha Election Result 2024 Live Update: தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அகில இந்திய திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), பாரதிய ஜனதா கட்சி (பாஜக), நாம் தமிழர் கட்சி (என்டிகே) என நான்கு முனைப் போட்டி நிலவி வந்தது. 

2024 மக்களவை தேர்தல் முடிவுகளின் அப்டேட்களையும், வேட்பாளர்களின் வெற்றி தோல்விகளையும் இங்கு உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்.

4 June, 2024

  • 18:06 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 Live Update: டெல்லி செல்லும் முதலமைச்சர்

    இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் டெல்லியில் நாளை ஆலோசனை. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்

  • 18:02 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 Live Update: கமல்ஹாசன் வாழ்த்து

    திமுக அரசு செய்து காட்டிய மக்கள் பணிகளுக்கு மக்கள் கொடுத்துள்ள தெளிவான ரிசல்ட் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

  • 17:00 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை செல்வராஜ் 4,70,000 வாக்குகள் பெற்று வெற்றி

  • 16:53 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தமிழகத்தில் புகார் இல்லை!

    "தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற்று வருகிறது, இது தொடர்பாக எந்த விதமான புகாரும் இதுவரை வரவில்லை" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு

  • 16:38 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: கனிமொழி வெற்றி

    தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு. மேலும் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் அமைப்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெற்றுள்ளார்.

  • 16:03 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தங்க தமிழ்செல்வன் முன்னிலை

    தேனி தொகுதியில் 12 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,69164வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 12 சுற்று முடிவில் வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் விபரம்:

    திமுக - தங்கதமிழ்செல்வன் - 3,23718
    அதிமுக - நாராயணசாமி - 90908
    அமமுக - டிடிவி தினகரன் - 1,54554
    நாதக - மதன் ஜெயபாலன் - 42747
    நோட்டா - 6382

  • 15:50 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: 40 தொகுதிகளிலும் திமுக முன்னிலை!

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. 

  • 15:42 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: வெற்றியை உறுதி செய்த கலாநிதி 

    திமுக வட சென்னை வேட்பாளர், கலாநிதி வீராசாமி தனது வெற்றியை உறுதி செய்தார்.

  • 15:39 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தாரகை கத்பட் வெற்றி

    விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட தாரகை கத்பட் வெற்றி

  • 15:23 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தருமபுரி - திமுக முன்னிலை

    தருமபுரி மக்களவைத் தொகுதியில் பத்தாவது சுற்று வரை பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை பெற்று வந்தார். 

    12-வது சுற்றில் திமுக வேட்பாளர் மணி 2142 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்க தொடங்கினார். 

    13-வது சுற்றில் திமுக வேட்பாளர் 12 ஆயிரத்து 422 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

  • 15:15 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: நீலகிரி தனி தொகுதி

    13-ம் சுற்று வரை வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள்.

    திமுக        -  317577
    அதிமுக   - 138541
    பா.ஜ.க     - 157767
    நாதக        -  36491

    எண்ணப்பட்டுள்ள மொத்த வாக்குகள்  - 6,73204; திமுக வேட்பாளர் ஆ.ராசா  1,59810 வாக்குகள் வித்தியாசத்தில்  முன்னிலை.

  • 15:14 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: நாகை தொகுதி

    சிபிஐ கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் 107740 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.

  • 15:05 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: பொள்ளாச்சி மக்களவை தொகுதி 10வது சுற்று நிலவரம்.

    திமுக- 254353
    அதிமுக -147705
    பாஜக -112473
    நாம் தமிழர் -28581

    94648வித்தியாசத்தில் திமுக முன்னிலை.

  • 14:57 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: விஜய் பிரபாகரன் முன்னிலை

    விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கத் தாகூரும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் மாறி மாறி முன்னிலை வகித்து வரும் நிலையில் ஏழாம் சுற்று வரை விஜய் பிரபாகரன் முன்னிலை வைத்து வந்தார். அதன் பிறகு இரண்டு சுற்றுகளில் மாணிக்கத் தகவல் முன்னிலை வகித்தார். தற்பொழுது நிலவரப்படி 194 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் பிரபாகரன் முன்னிலை பெற்றுள்ளார்

  • 14:34 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: நோட்டாவுடன்  மன்சூர் அலிகான் போட்டி

    வேலூர் மக்களவைத் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 
    நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.

    6 சுற்று முடிவில் 

    மன்சூர் அலிகான் - 827 

    நோட்டா - 2669

  • 14:31 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தங்க தமிழ்செல்வன் முன்னிலை

    தேனி தொகுதியில் 9 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,33,438 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

  • 14:17 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live:பிரேமலதா விஜயகாந்த் தியானம்

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழக அலுவலகம் மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று தேமுதிக கழக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தியானத்தில் ஈடு பட்டு வருகிறார்.

  • 13:58 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: நாகை தொகுதி - சிபிஐ கட்சி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

    சிபிஐ கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் 93050 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

  • 13:51 PM

    தமிழகத்தில் முதன்முறையாக தனித்து 10 சதவீத வாக்கை கடந்தது பாஜக; தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கட்சி வாரியாக பெற்ற வாக்கு சதவீதம், திமுக - 25.09%, அதிமுக- 20.94%, பாஜக- 10.02%, காங்கிரஸ் - 10.68%

  • 13:46 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: கோவை மக்களவை தொகுதி 5வது சுற்று முடிவு

    திமுக 127784 
    பாஜக 102784
    அதிமுக 53811
    நாம் தமிழர் 18380 

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  25000 வாக்குகள் முன்னிலை.

  • 13:29 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: வெளியேறிய நயினார் நாகேந்திரன்

    வாக்கு என்னும் மையத்தில் இருந்து திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் வெளியேறிய நிலையில் தற்போது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.

  • 13:14 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: கார்த்திக் சிதம்பரம் முன்னிலை

    சிவகங்கை நாடாளுமன்றதொகுதிக 6வது சுற்று இறுதி நிலவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    காங்கிரஸ் - 19758
    அதிமுக - 11275
    பாஜக - 8752
    நாம் தமிழர் - 7943

  • 13:10 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: அதிக வாக்கு வித்தியாசம்

    தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் திண்டுக்கல் வெற்றி வேட்பாளர் சச்சிதானந்தம் 165000 வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருமதி. கனிமொழி 156500, அவருக்கு அடுத்தபடியாக மத்திய அமைச்சர் அமித்ஷா 154000 வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளனர்.

  • 13:09 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: மன்சூர் அலிகான் பின்னடைவு!

    வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் 606 வாக்குகள் பெற்று பின்னடைவு!

  • 12:46 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தமிழச்சி தங்கபாண்டியன் தொடர்ந்து முன்னிலை

    தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 37,481 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடர்ந்து முன்னிலை. நான்காம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை விவரம்

    திமுக - 1,03,990
    பாஜக - 66,509
    அதிமுக - 33,544

  • 12:40 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: விஜய பிரபாகரன் முன்னிலை 

    விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ஐந்தாம் சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 5119  முன்னிலை 

    வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு விபரம் 

    தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 99721
    காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் 94602
    பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 36571 
    நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 20350

  • 12:21 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: அமைச்சராகும் அன்புமணி?

    பாஜக கூட்டணியில் தருமபுரியில் மட்டுமே முன்னணியில் உள்ள நிலையில் ஒரு வேளை பாமக வெற்றி பெற்றால் அன்புமணி அல்லது சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி உறுதி என்று கூறப்படுகிறது.

  • 12:09 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தனி சின்னத்தில் போட்டியிட்டவர்கள் முன்னிலை

    திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்ட விசிக திருமாவளவன், திருச்சி துரை வைகோ, நவாஸ் கனி ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

  • 12:04 PM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: கார்த்தி சிதம்பரம் 26,532 வாக்குகள் முன்னிலை

    சிவகங்கை மக்களவைத் தொகுதி: 3-வது சுற்று

    1. கார்த்தி சிதம்பரம் (காங்) - 60,839

    2. சேவியர் தாஸ் (அதிமுக) - 34,307

    3. தேவநாதன் யாதவ் (பாஜக) - 23,433

    4. எழிலரசி (நாம் தமிழர் கட்சி) - 21,544

  • 11:56 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: சைதாப்பேட்டை 4ம் சுற்று - திமுக முன்னிலை

    4ம் சுற்றில் மேசை 14ல் உள்ள பெட்டி பழுது ஏற்பட்டுள்ளதால் வாக்குகள் எண்ணப்படவில்லை. அதனால் 14வது மேசை பெட்டியை தவிர்த்து மற்ற பெட்டிகளின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.

    திமுக - 3086
    அதிமுக - 841
    பாஜக - 2013
    நாதக - 458

  • 11:37 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தென்சென்னை மூன்றாம் சுற்று முடிவு 

    திமுக - 25100
    அதிமுக - 7074
    பா.ஜ.க - 19463
    நா.த.க - 3356

    மூன்றாம் சுற்று முடிவில் தொடர்ந்து திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

    பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை இரண்டாம்

  • 11:24 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: கூட்டணி மட்டுமே முன்னிலை

    • பாஜக கூட்டணியில் பாமக தர்மபுரி தொகுதியில் முன்னிலை 
    • அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக முன்னிலை 
    • பாஜக மற்றும் அதிமுக இரு கூட்டணியிலும் உள்ள கூட்டணி கட்சி மட்டுமே முன்னிலை பெற்று இருக்கிறது தலைமை தாங்க கூடிய பாஜகவோ அதிமுகவோ எந்த இடங்களையும் பெறவில்லை
  • 11:10 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: திமுக கூட்டணி முன்னிலை

    கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 34,455 வாக்குகள் பெற்று முன்னிலை.

    நீலகிரி திமுக வேட்பாளர் ஆ ராசா 50119 வாக்குகள் பெற்று முன்னிலை.

    வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீரசாமி 27,586 வாக்குகள் பெற்று முன்னிலை.

  • 10:49 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: காங்கிரஸ் முன்னிலை

    கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 34,455 வாக்குகள் பெற்று முன்னிலை

  • 10:41 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தூத்துக்குடி தொகுதி இரண்டாவது சுற்று நிலவரம்

    DMK 25849

    ADMK 7286

    TAAMAAKAA - 5948

    NTK 4812.  

    இதுவரை பெற்றுள்ள மொத்த வாக்குகள்  

    DMK 56188

    ADMK 15661 

    TAAMAAKAA - 9258

    NTK 11219

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இரண்டாவது சுற்று திமுக வேட்பாளர் கனிமொழி 40,522 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

  • 10:21 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: ஒரு ஓட்டு வாங்கிய அண்ணாமலை

    கோவையில் அண்ணாமலைக்கு ஒரு வாக்கு சாவடியில் ஒரு ஓட்டு மட்டுமே விழுந்துள்ளது.

  • 10:13 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: ஜோதிமணி முன்னிலை

    கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 2945 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

  • 10:03 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: மதிமுக முன்னிலை

    திருச்சி மக்களவை எண்ணிக்கை நிலவரம் 

    மதிமுக துரைவைகோ : 26186

    அதிமுக
    கருப்பையா : 12981

    அமமுக 
    செந்தில்நாதன் : 4047

    நாம் தமிழர்
    ராஜேஸ் : 5847

  • 10:00 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: அதிமுக முன்னிலை

    தற்போதைய நிலவரப்படி அதிமுக விருதுநகர் மற்றும் தென்காசி தொகுதிகளில் முன்னிலை இருக்கிறது.  முன்னிலையில் இருக்கக்கூடிய இரண்டு வேட்பாளருமே  கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள், அதிமுக கூட்டணியில் விருதுநகரில் தேமுதிகவும் தென்காசியில் புதிய தமிழகம் முன்னிலை.

  • 09:53 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை 

    பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை விட 12513 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை; தென்சென்னை தொகுதியில் பா.ஜ.க இரண்டாம் இடத்தில் உள்ளது

  • 09:52 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தென்காசி தொகுதியில் திமுக முன்னிலை

    தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது.  இதில் முதல் சுற்றில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 2920 வாக்குகள், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 1901 வாக்குகள், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியன் 1808 வாக்குகள் பெற்றுள்ளனர்.

  • 09:34 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: கோவையில் பாஜகவை முந்திய அதிமுக

    கோயம்புத்தூர் தெற்கு தொகுதி இரண்டாம் சுற்று முடிவில் திமுக முன்னிலை

    திமுக 4546
    அதிமுக 1600
    பாஜக 164

  • 09:23 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: 30+ இடங்களில் திமுக முன்னிலை

    தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

  • 09:18 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: அண்ணாமலைக்கு பின்னடைவு!

    கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி முதல் சுற்று முடிவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பின்னடைவு. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை.

  • 09:11 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தென் சென்னையில் திமுக முன்னிலை

    தென்சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதி 1வது சுற்று 

    திமுக - 4184

    பாஜக - 1314

    அதிமுக - 1298

    நாம்தமிழர் - 708

  • 09:06 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: திருப்பூர் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது 

    திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 7179  வாக்குகள் பதிவாகியிருந்தன அதனை எண்ணும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது இதில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் முன்னிலையில் உள்ளார்.

  • 08:55 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: திமுக முன்னிலை

    திருவிக நகர் தொகுதியில் இயந்திர வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

    திமுக -342
    அதிமுக - 78
    பாஜக - 110
    நாம்தமிழர் - 82

  • 08:54 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: கோவையில் பாஜக பின்னடைவு

    கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தபால் வாக்கு எண்ணிக்கையில் 433 வாக்குகள் பெற்று முன்னிலை

  • 08:41 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: மத்திய சென்னை மக்களவை தொகுதியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

    முதல் சுற்றில் மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி முதல் சுற்று நான்காயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை.

  • 08:40 AM

    Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: திருச்சியில் துரை வைகோ முன்னிலை

    திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலை பெற்று வருகிறார். இரண்டாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளார்.

Trending News