தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் என்று பலரால் கருதப்படும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை. இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளையும், புரோமோஷன் பணிகளையும் பொன்னியின் செல்வன் குழு தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில்பொன்னியின் செல்வனின் டீசர் வெளியீடு பிரமாண்டமாக நடந்தது. டீசரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறிவருகின்றனர். அதேசமயம், படத்தின் கதாபாத்திர பெயர்கள் மீதும், லுக்குகள் மீதும் சிலர் அதிருப்தியையும் தெரிவித்துவருகின்றனர். இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரித்துள்ளது.



இந்தச் சூழலில், படத்தில் இடம்பெற்றிருக்கும் பொன்னி நதி என்ற பாடலை தனியார் மால் ஒன்றில் பிரமாண்டமாக வெளியிட்டனர். இதில், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் கலந்துகொண்டனர். பாடலானது அந்த மாலில் வைக்கப்பட்டிருந்த ஸ்க்ரீனில் ரசிகர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.


 



இந்நிலையில் படத்தின் மற்ற பாடல்களும் ட்ரெய்லர் வெளியீடும் எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியோடு பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.


மேலும் படிக்க | ‘பொன்னி நதி பார்க்கணுமே’ - வெளியானது பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள்


அதுமட்டுமின்றி அந்த விழாவில் கலந்துகொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பு சென்றிருப்பதாகவும், அவர்கள் வந்து பாடல்களை வெளியிடுவர் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், ட்ரெய்லரை முதலமைச்சர் ஸ்டாலினை வைத்து வெளியிட நினைத்த படக்குழு இதற்கான அனுமதியையும் கேட்டிருக்கின்றனர். 


அதற்கு இசைவு தெரிவித்த ஸ்டாலின் செப்டம்பர் 6ஆம் தேதி ஒதுக்கிக்கொடுத்திருப்பதாகவும், அதனால்தன் பொன்னியின் செல்வன் ஆடியோவும், ட்ரெய்லரும் அன்றைய நாள் வெளியிடப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. மேலும், பொன்னியின் செல்வன் ட்ரெய்லரை முதலமைச்சர் வெளியிடவே அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ