குக்வித் கோமாளி அஸ்வினை வாழ்த்திய மோகன்லால்!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு குக்வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்துள்ள `அடிபொலி` என்ற ஆல்பம் சாங் இன்று வெளியாக உள்ளது. இதனைப் பாராட்டி அந்த குழுவினருக்கு மோகன்லால் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு குக்வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்துள்ள 'அடிபொலி' என்ற ஆல்பம் சாங் இன்று வெளியாக உள்ளது. இதனைப் பாராட்டி அந்த குழுவினருக்கு மோகன்லால் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
தற்போது தமிழக மக்களிடையே ஆல்பம் சாங்ஸ் பிரபலமடைந்து வருகிறது. பின்னணி பாடகர் தீ, அறிவு இணைந்து பாடிய என்ஜாய் என்ஜாமி பாடல் யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவனம் ஈர்த்தவர் அஸ்வின். இவர் தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அஸ்வினின் 'குட்டி பட்டாஸ்' என்ற பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து இளைஞர்களிடையே வைரலானது. இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்துள்ளது.
ALSO READ புதுச்சேரி முதல்வரை சந்தித்த விஜய் சேதுபதி!
இந்த நிலையில், அஸ்வினின் அடுத்த ஆல்பம் பாடலான ‘அடிபொலி’ பாடல் ஓணம் பண்டிகையையொட்டி இன்று வெளியாகவிருக்கிறது. இப்பாடலை குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியும், வினீத் ஸ்ரீனிவாசனும் பாடியிருக்கிறார்கள். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசையமைப்பாளர் சித்து குமார் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் தமிழகம் தாண்டி கேரள வரை சென்றுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடலைப் பகிர்ந்து குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இன்று மாலை இந்த பாடல் யூடியூபில் வெளியாக உள்ளது.
குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகர் புகழும் தற்போது தமிழில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். வலிமை படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் விஜய்சேதுபதியுடன் பைக்கில் செல்வது போல இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR